மேலும் அறிய

பழசுக்கு டாட்டா... புதுசா இறக்கி இயக்கிட்டாங்க: பேராவூரணி மக்கள் மகிழ்ச்சி எதுக்கு தெரியுங்களா?

பேராவூரணி மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது. இதன் அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து கோவைக்கு புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து தங்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பேராவூரணி மக்கள் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கோவைக்கு, புழக்கத்தில் இருந்த பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மிக முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது. இதன் அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.  இதேபோல் ரெட்டவயலில் அருள்பாலிக்கும் கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

பழசுக்கு டாட்டா... புதுசா இறக்கி இயக்கிட்டாங்க: பேராவூரணி மக்கள் மகிழ்ச்சி எதுக்கு தெரியுங்களா?
 
அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதேபோல் பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் படப்பனார்வயல் ஆலடியார் கோவில். உள்ளது. பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.

ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்ஆகியவையும் அமைந்துள்ளது. விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது. இதேபோல் ஒட்டங்காடு ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும்  ஐயப்பன் சுவாமி கோயில். மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாறு மிகவும் முக்கியமான பகுதியாக பேராவூரணி விளங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு தரப்பினரும் தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் செல்கின்றனர். இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு தினசரி காலை 9.10 மணிக்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பேராவூரணி பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து மிகவும் பழமையான பேருந்து ஆகும். பேராவூரணியில் இருந்து நேரடியாக தொலைவில் உள்ள கோவைக்கு இயக்கப்படும் இந்த பேருந்தை புதிய பேருந்தாக மாற்றி இயக்க வேண்டும் என்று தொடர்ந்து பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த பழைய பேருந்துக்கு பதிலாக புத்தம் புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கொடியசைத்து புதிய பேருந்தை துவக்கி வைத்து, டிக்கெட் எடுத்து சிறிது தூரம் பயணித்தார். இதில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் எஸ்.ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வீரியங்கோட்டை சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொமுச இளமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பேராவூரணியிலிருந்து இயக்கப்பட்ட பேருந்து மிகவும் பழசான ஒன்று. இதில் பயணம் செய்யும் போது வெகுநேரம் உட்கார்ந்து செல்ல முடியாத நிலையாக இருந்து வந்தது. இப்பகுதியிலிருந்து கோவைக்கு அடிக்கடி தொழில் நிமித்தமாக பலரும் சென்று வருகின்றனர். அதனால் இந்த பேருந்தை மாற்றி விட்டு புதிதாக பேருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புத்தம் புதிதாக பேருந்தை தொடக்கி வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தலைப்பு செய்திகள்

Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
Embed widget