மேலும் அறிய
Advertisement
Nagapattinam: 77 வயதில் நீச்சலில் அசத்தி பலருக்கும் பயிற்சி கொடுக்கும் மூதாட்டி - நேரில் பாராட்டிய நாகை எஸ்.பி.
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் ஆபத்து காலங்களில் நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும் என்று கூறினார்.
நீச்சலில் அசத்தி பலருக்கும் பயிற்சி கொடுத்து வரும் 77 வயது நாகை மூதாட்டியின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாதானதை அடுத்து அவரது வீட்டிற்கு சென்று நாகை எஸ்பி ஹர்சிங் பாராட்டியுள்ளார்.
நாகையில் உள்ள புதிய முகமதியார் தெருவை சேர்ந்தவர் ராமாமிர்தம். 77 வயதான ராமாமிர்தம் நீச்சலில் அசத்தி பலருக்கும் பயிற்சி கொடுத்து வருவது குறித்தான சமூக வலைதளங்களில் வெளியானது. சமூக வலைதளங்களிலும் பாட்டியின் நீச்சல் வீடியோ வைரலானதால் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தள்ளாடும் வயதிலுள்ள பாட்டியின் நீச்சல் கலையை பார்த்து பிரமித்த நாகை எஸ்பி ஹர்சிங் பாட்டியை பாராட்டுவதற்காக அவருடைய வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்துள்ளார். எஸ்பி வருகையை பார்த்து வியந்துபோன பாட்டியின் குடும்பத்தினர் அவருக்கு வரவேற்பு கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். பின்னர் பாட்டியின் நீச்சல் பயிற்சிகள் குறித்து அவருடன் உரையாடிய நாகை எஸ்பி இளைய தலைமுறைகள் உடலும் மனமும் நலம்பெற கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
77 வயதான ராமாமிர்தம் தனது 10 வயதில் தனது தந்தையுடன் கிணற்றுக்கு செல்லும்பொழுது நீச்சல் கற்றுக்கொண்டு இருந்துள்ளார். தந்தையை ஆசானாக ஏற்றுக்கொண்டு ராமாமிர்தம் பலவகையான நீச்சலை கற்றுக்கொண்ட நிலையில், தற்போது அதனை பிறருக்கும் பயிற்றுவித்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள் என பலருக்கும் தனக்கு தெரிந்த நீச்சல் கலைகளை 77 வயதிலும் நீச்சல் குளத்தில் தனக்கான ஓய்வு நேரங்களில், விடுமுறை நாட்களில் கற்றுக்கொடுக்கிறார்.
இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கூறுகையில், “எனக்கு 5 வயது இருக்கும் போதே தந்தையிடம் இருந்து பலவகை நீச்சலை கற்றுக்கொண்டேன். அப்போது தந்தையின் உடையை பிடித்துக்கொண்டு நீந்தி பழகினேன். பொழுதுபோக்காக நீச்சல் அடிக்க ஆரம்பித்தது, பின்னாளில் பழக்கமாகிவிட்டது. எனது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் நான் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளேன். என்னிடம் 5 வயது முதல் 40 வயது வரை உள்ள பலரும் நீச்சல் கற்றுக்கொள்ள வருகிறார்கள். வயதானாலும் கற்பிக்கும் ஆர்வம் தொடர்வதால், அவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகிறேன்" என்று தெரிவித்தார். மேலும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் ஆபத்து காலங்களில் நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion