மேலும் அறிய

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு

புத்த விகாரங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நாகையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் சோழர்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது.

நாகையில் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு தமிழர் நாகரிகம் வெளிகொண்டு வரப்படும் என தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விகாரம் இருந்ததாகவும், அதில் ஆய்வு மேற்கொண்டு நாகை மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கீழடியில் முதன்முதலாக அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய, இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு
 
8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள சூடாமணி விகாரம், புத்த விகாரம், இருந்ததாக சொல்லப்படும் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து நீதிமன்ற மன்ற வளாகத்தில் உள்ள 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோட்டாட்சியர் அலுவலகம், கடற்கரை சாலையில் உள்ள தொன்மைவாய்ந்த அருங்காட்சியகம், உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
நாகை மாவட்டத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு, எவ்வளவு பழமையானது என்பது தெரியவரும். புத்த விகாரங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் நாகையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் சோழர்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. நமது நாகரிகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால் இதுபோன்ற அடையாள சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Nagapattinam: சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு
 
பௌத்த அடையாளங்களை தாங்கி நிற்க கூடிய நாகை மாவட்டத்தில் ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வில் மீட்கப்பட்ட புத்த சிலைகளை மீண்டும் நாகை மாவட்டத்திற்கு கொண்டு வந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், பழைய நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியை நாகை மாவட்டத்தின் அடையாள சின்னமாக மாற்ற வேண்டும், மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வில் பங்கேற்ற நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சென்னை பல்கலைகழக பேராசிரியரும், தொல்லியல் ஆலோசகருமான சேரன், துணை தொல்லியல் கண்காணிப்பாளர் குமரன், உதவி தொல்லியலாளர் பிரசன்னா ஆகியோர் வருகைதந்துள்ள குழுவினர் நாகை மாவட்டத்தின் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
Embed widget