மேலும் அறிய
Advertisement
நாகையில் களைகட்டும் கள்ளச்சாராய விற்பனை - கல்லா கட்டும் சமூகவிரோதிகள்...! கண்டுகொள்ளாத போலீஸ்...!
’’வெள்ளைநிற சாக்கில் வைத்து ரஸ்னா பாக்கெட் எனப்படும் பாண்டி சாராய பாக்கெட்டுகளை வெட்டவெளியில் அச்சமின்றி விற்பனை செய்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்’’
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தமிழ்நாட்டை விட குறைந்த விலையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ளவர்கள் அங்கு சென்று குறைந்த விலையில் மது அருந்தி வருகின்றனர். இதனால் நாகை மாவட்டம் அருகே உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் மதுபான கடைகளில் திருவிழா கூட்டம் போல் எப்போதும் காணப்படும். இங்கு குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நான்கு சக்கர வாகனம் மூலமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் கடத்திச் சென்று தமிழக பகுதிகளில் விற்பனை செய்து பெரும் வருவாயை ஈட்டி வருகின்றனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள பல்வேறு சோதனை சாவடிகளிலும், மற்றும் தனிப்படை போலீசார், அந்தந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் மது கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவும் விதமாகவும், காவல்துறையினரை கணிசமான தொகையை கொடுத்த கவனித்தும் மது கடத்தல் மன்னர்கள் பெருமளவில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள மதுபானங்களை புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தமிழக பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பில்லாலி அடுத்த அனவசநல்லூர் விவசாய நிலத்திற்கு செல்லும் வரப்பு பகுதியில் வெள்ளைநிற சாக்கில் வைத்து ரஸ்னா பாக்கெட் எனப்படும் பாண்டி சாராய பாக்கெட்டுகளை வெட்டவெளியில் அச்சமின்றி விற்பனை செய்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கும் சமூக ஆர்வலர்கள், விற்கப்படும் சாராய பாக்கெட்டுகளை வாங்கி அருந்திவிட்டு அங்கு ரகளையை ஈடுபடுவதால் கிராமத்தில் அமைதி சீர் கெடுவதோடு பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் கிராம மக்கள், இப்பகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதிலும் இதேபோல் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருவது காவல்துறையினரின் அனுமதியோடு தான் என குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெருமளவில் ஏற்படும் குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்பனைசெய்யும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion