மேலும் அறிய

மயிலாடுதுறையில் மாஸ்க் அணியாதவர்களின் காலில் விழுந்த பேரூராட்சி ஊழியர்

முகக்கவசம் அணியாதவர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பேரூராட்சி ஊழியர் ஒருவர்.

மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாதவர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த மணல்மேடு பேரூராட்சி ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 24-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்தது. இருந்தும் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை சிறிதும் மதிக்காமல் வீதிகளில் வலம்வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஒரு வார காலத்திற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறையில் மாஸ்க் அணியாதவர்களின் காலில் விழுந்த பேரூராட்சி ஊழியர்

இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுநாள் வரை 23 ஆயிரத்து 57 பேர் பாதிக்கப்பட்டு, 18 ஆயிரத்து 418 குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 271 பேர் பலியான நிலையில் மயிலாடுதுறை சீர்காழி புத்தூர் வேதாரண்யம் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரத்து 368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் மணல்மேடு கடைவீதியில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களின் காலில் விழுந்து பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் முகக்கவசம் அணிய வலியுறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மயிலாடுதுறையில் மாஸ்க் அணியாதவர்களின் காலில் விழுந்த பேரூராட்சி ஊழியர்

இதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மணல்மேடு பேரூராட்சி சார்பில் தினந்தோறும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழக அரசு திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற பொதுமுடக்கத்தை அறிவித்ததையடுத்து, மணல்மேடு பேரூராட்சியில் கடைகள் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் முண்டியடித்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் என்பவர் தடுத்து நிறுத்தி, ஏன் முகக்கவசம் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பி, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து, கைகூப்பி வணங்கி முகக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து எடுத்துரைத்து முகக்கவசத்தை வழங்கி அணிந்துகொள்ளச் செய்துள்ளார். போலீசார் ஊரடங்கு மீறி வெளியில் சுற்றுபவர்களையும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கடுமையாக கண்டித்தும் மாற்றம் ஏற்படாத சூழலில், இவர் காலில் விழுந்து முகக்கவசம் அணிய செய்தது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை மன உறுத்தலுடன் குற்றவுணர்வுக்கு ஆளாகி அவர்கள் இனி எப்போதும் முகக்கவசத்தை மறக்காத வண்ணம் அமைந்துள்ளதாக அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கண்டவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் மாஸ்க் அணியாதவர்களின் காலில் விழுந்த பேரூராட்சி ஊழியர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
Today Rasipalan:மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
Today Rasipalan:மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா? பள்ளியில் கும்பல் அட்டூழியம்.. தெலங்கானாவில் பதற்றம்!
காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா? பள்ளி மீது தாக்குதல்.. தெலங்கானாவில் பதற்றம்!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
அம்பை கொண்டு மசூதியை குறி வைத்த பாஜக வேட்பாளர்? யார் இந்த மாதவி? வைரலாகும் சர்ச்சை வீடியோ!
அம்பை கொண்டு மசூதியை குறி வைத்த பாஜக வேட்பாளர்? யார் இந்த மாதவி? வைரலாகும் சர்ச்சை வீடியோ!
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Embed widget