மேலும் அறிய

காலை உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியாக கூறுவதுதான் திட்டத்தின் வெற்றி - அமைச்சர் பெருமிதம்

பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக கூறுவது தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம் என்று தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தஞ்சாவூர்: பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக கூறுவது தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம் என்று தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 416.13 லட்சம் மதிப்பில் 22 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசுக் கட்டடத்தை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் திறந்துவைத்தார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டையம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், காங்கேயம்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், வடக்குபாளையப்பட்டி ஊராட்சி உசிலம்பட்டியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சானூரப்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் செங்கிப்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும், புதுப்பட்டிஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும்,தஞ்சாவூர் வட்டம், மருதகுடி ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமும், அக்கரைபேட்டைஊராட்சியில் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமும்,ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும், திருவையாறு வட்டம், சாத்தனூர் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், மரூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதியகட்டிடமும், திருப்பழனம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிமையபுதியகட்டிடமும் திறக்கப்பட்டது.

காலை உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியாக கூறுவதுதான் திட்டத்தின் வெற்றி - அமைச்சர் பெருமிதம்

கண்டியூர் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், கண்டியூர் ஊராட்சியில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவு தானிய சேமிப்பு கிடங்கு மைய கட்டிடமும் என 22 புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

பள்ளி குழந்தைகளை சந்திக்கும்போது அவர்கள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக தெரிவிப்பது அந்த வார்த்தைகள் தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்த உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் இங்கு வந்து பார்த்து இத்திட்டத்தை தெலுங்கானாவிலும் தொடங்கவிருக்கிறோம் எனக் கூறி இருக்கிறார்கள். எனவே திட்டம் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதிலுள்ள கருத்தியல் கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். சமநீதியும் சமதர்மமும் இல்லாத அந்த கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பிள்னர் தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டையில் திமுக மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பாக சீரமைக்கப்பட்ட கலைஞரின் பொதுவாழ்வு பொன்விழா வளைவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவிற்கு திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். இந்த பொன்விழா வளைவானது 1989 ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது மறு சீரமைக்கப்பட்டு இந்த வளைவில் அண்ணா மற்றும் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொன்விழா வளைவு தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் அம்மன்பேட்டை ஆகிய மூன்று இடத்தில் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget