மேலும் அறிய

கேரம், வாலிபால் போட்டிகளை உற்சாகமாக தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லூரி மாணவிகளுக்கு கேரம் மற்றும் வாலிபால் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச் செல்வன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்லூரி மாணவிகளுக்கு கேரம் மற்றும் வாலிபால் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் முன்னிலை வகித்தார். கடந்த 10ம் தேதி தொடங்கிய போட்டிகள் அடுத்த மாதம் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து, கைப்பந்து, கூடை பந்து, கபடி, நீச்சல், கரிக்கெட், ஹாக்கி, டேபில் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து, ஆக்கி, கபடி, நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கேரம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி ஆகியவை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

கேரம், வாலிபால் போட்டிகளை உற்சாகமாக தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கால்பந்து, கைப்பந்து போட்டிகள்

இதேபோல் பரிசுத்தம் பொறியியல் கல்லூரியில் கால்பந்து போட்டியும், பூண்டி புஷ்பம் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கைப்பந்து போட்டியும், நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோ-கோ விளையாட்டு போட்டியும் நடந்தது. இந்த போட்டிகளில் 3 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இணையதளம் மூலம் பதிவு இதுவரை 9000 வீரர் வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். குழு அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தஞ்சை மாவட்ட அணியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் தனி நபர்களாக வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில் அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

வாலிபால் போட்டியில் சர்வீஸ் செய்த அமைச்சர்

மாநில அளவிலான போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்  உடற்கல்வி இயக்குநர் ராதிகா, நீச்சல் பயிற்றுநர் ரஞ்சித் குமார், கபடி சங்க துணை தலைவர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேரம் போர்டு விளையாடி தொடங்கி வைத்தார். மேலும் வாலிபால் சர்வீஸ் செய்து போட்டியை தொடங்கி வைத்தார். 

அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்ததோடு திமுகவிற்கு எதிராக செயல்படுவதாக கேட்டதற்கு இதற்கு அந்தத் துறையின்  அமைச்சர் பதிலளித்திருக்கிறார். அவருடைய கருத்துக்களை வலியுறுத்தி விழிப்புணர்வை கொண்டு வருகிறார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கேட்டதற்கு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசியிருக்கிறோம். 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர்களுடைய உரிமைகளை சொல்லி இருக்கிறார்கள் கண்டிப்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் நல்ல முடிவு எடுக்கப்படும். மகாவிஷ்ணு பேசியது போலவே இன்னொரு அமைச்சர் பேசி இருப்பதாக கூறியதற்கு அதை நான் பார்க்கவில்லை மகாவிஷ்ணு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தஞ்சை எம்.பி., ச.முரசொலி, எம்.எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Retention List: அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
IPL 2025:ஐபிஎல் மெகா ஏலம்; யார் உள்ளே? யார் வெளியே?
IPL 2025:ஐபிஎல் மெகா ஏலம்; யார் உள்ளே? யார் வெளியே?
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Retention List: அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
IPL 2025:ஐபிஎல் மெகா ஏலம்; யார் உள்ளே? யார் வெளியே?
IPL 2025:ஐபிஎல் மெகா ஏலம்; யார் உள்ளே? யார் வெளியே?
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
Diwali 2024 : தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் குவிந்த மக்கள்! டக்கு டக்குன்னு விற்று தீர்ந்த இறைச்சி!
Diwali 2024 : தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் குவிந்த மக்கள்! டக்கு டக்குன்னு விற்று தீர்ந்த இறைச்சி!
பிரச்னை ஓவர்.. தீபாவளி ட்ரீட்  கொடுத்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்.. சீன ராணுவ வீரர்கள் ஹேப்பி!
சீன ராணுவ வீரர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. கொண்டாடி மகிழ்ந்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்!
Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!
Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
Embed widget