மேலும் அறிய

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரு மாநில எல்லைகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஒனேக்கல்லுக்கு நேற்று முன்தினம் 88 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் நேற்றிலிருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் செல்கிறது.

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 97 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகுகளை உபரி நீர் போக்கி வழியாகவும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் எந்த நேரமும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சேலம், ஈரோடு நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாருர், மயிலாடுதுறை, நாகை , கடலூர் உள்பட 12 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

இந்நிலையில் தஞ்சாவூர் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டப்பட்டுள்ள காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்டம் பழையார் ஆற்றில் சென்று கலக்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரையோர கிராமங்களில் வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களான நாதல் படுகை கிராம ஊராட்சி சார்பாக அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒலிபெருக்கி மூலமாக கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதே போல வெள்ளைமணல், முதலைமேடு திட்டு உள்ளிட்ட ஆற்றுப்படுகை கிராமங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தங்கி உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு சென்று தங்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த மாத தொடக்கத்தில் திறக்கப்பட்ட காவிரி நீரால் கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததை அடுத்து கிராம மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு வார காலத்துக்குள் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget