மேலும் அறிய

செங்கோல் விவகாரம்; சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய திருவாவடுதுறை ஆதீனம்

செங்கோல் குறித்து தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் குறிப்பானை அனுப்பப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28 -வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்  கடந்த 03.01.2022 முதல் அருளாட்சி செய்து வருகிறார். இவர் அதற்கு முன்னதாக திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டளை தம்பிரானாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுதந்திர செங்கோல் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதற்கான விளக்கம் கேட்டும், ஆதீனத்தில் குற்ற பின்னணி உடைய நபர்களை தங்க வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

செங்கோல் விவகாரம்; சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய திருவாவடுதுறை ஆதீனம்

அக்கடிதத்தின் முழுவிபரம் வருமாறு, சூரியனார்கோயில் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகள் கடந்த 03.01.2022 அன்று பரிபூரணம் அடைந்ததால், திருவாவடுதுறை ஆதீன வழக்கப்படி ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து வந்த ஸ்ரீமத் அம்பலவானத் தம்பிரான் அவர்களை 28 -வது குருமகா சந்நிதானமாக திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் ஆதீன மரபுகளின்படி திருவான தீட்சை, ஆச்சாரிய அபிஷேகம் செய்யப்பெற்று, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டு பொறுப்பேற்க செய்தருளினார்கள். 

செங்கோல் விவகாரம்; சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய திருவாவடுதுறை ஆதீனம்

அதன்படி தாங்கள் சூரினார்கோயில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானமாக பொறுப்பேற்ற பிறகு சூரியனார்கோயில் ஆதீன மரபுகளையும். திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் சிதைக்கும் வகையிலும், சைவ சமயத்திற்கு எதிராகவும், திருவாவடுதுறை ஆதினத்திற்கும், பாரத தேசத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சுதந்திரச் 'செங்கோலினைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தொடர்பாகவும், தங்களைப் பற்றிய தவறான தகவலும், முறைகேடான செய்திகள் காணொளி வாயிலாகவும், ஒளிநாடாக்கள் வாயிலாகவும் வந்தவண்ணம் உள்ளது. 

EPS Statement: கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? வெள்ளை அறிக்கை கொடுக்க தயாரா? - ஈபிஎஸ் காட்டம்..

செங்கோல் விவகாரம்; சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய திருவாவடுதுறை ஆதீனம்

இதன்மூலம் தனிமனித ஒழுக்க விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவருகிறது. ஆதலால், ஒழுங்கீன செயல்கள் ஆதீன விதிமுறைகளுக்கு எதிராகவும், மரபு சம்பிரதாயங்களுக்கு எதிராகவும் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகமிக மோசமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு சூரியனர்கோயில் ஆதீனமாக பொறுப்பு வழங்கிய தங்களது குருவான திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்கும்படியும். ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பணிகளைத் தொடர அறிவுறுத்தியும், மேற்படி புகார்கள் குறித்து தங்களிடம் பலமுறை விளக்கங்கள் கேட்டும் இதுவரை எந்தவொரு விளக்கமும் தராமலும், தங்களது கீழ்த்தரமான நடவடிக்ளககளை சரிசெய்துகொள்ளாமல் இருந்து வருவதால் சூரியனார்கோயில் ஆதின பொறுப்பில் தொடர தகுதியற்ற நபராக இருந்து வருகிறீர்கள். 

செங்கோல் விவகாரம்; சூரியனார்கோவில் ஆதீனகர்த்தரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய திருவாவடுதுறை ஆதீனம்

மேலும், ஆதீனத்தில் குற்றபின்னஜி உடையநபர்களை தங்க வைத்திருப்பது தெரியவருகிறது. மேற்கண்ட காரணங்களுக்காக உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியிலிருந்து ஏன் நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு பெற்ற 15 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சம் சமாதானம் கூற எதுமில்லை எனக்கருதி ஆதின விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தின் நகல் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.