மேலும் அறிய

சீர்காழி அருகே நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை இடித்த அரசு - வீடு இன்றி தவிக்கும் மக்கள்

சீர்காழி அருகே வீடு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதிகளை விட மோசமாக வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீர்காழி அருகே வீடு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதிகளை விட மோசமாக வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் நரிக்குறவர்கள் மக்கள் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வியாபாரம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  இவர்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தருவதாக கூறி அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு சென்றுள்ளனர்.

Sukran Peyarchi 2023: டிசம்பர் மாதத்தில் கோடிகளில் செழிக்கப்போவது யார்? - 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் இதோ..!

சீர்காழி அருகே நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை இடித்த அரசு - வீடு இன்றி தவிக்கும் மக்கள்

இந்நிலையில் இதனால் தங்குவதற்கு வீடு இன்றி இந்த மழை காலத்தில் மிகுந்த இன்னலுக்கு மத்தியில் தற்போது தார்ப்பாயில் டென்ட் அமைத்தும், அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள், கடை வாசல்களில் படுத்தும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக நரிக்குறவ மக்கள்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் அரசு சார்பில் 30 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் இலவச வீடு கட்டி தருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது‌. இந்த சூழலில் இரண்டு வீடுகளை கட்டி பாதிலே பணியை நிறுத்தி விட்டு சென்று விட்டதாகவும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Thangam Thennarasu: புயல் எச்சரிக்கை: 15 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள்; 3 லட்சம் மின் கம்பங்கள்- மின்சாரத்துறை அலெர்ட்

சீர்காழி அருகே நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை இடித்த அரசு - வீடு இன்றி தவிக்கும் மக்கள்

வீடு, கழிவறை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் அகதிகளை விட மோசமாக வாழ்ந்து வருவதாக கூறும் இப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், வெயில் காலங்களில் கூட வாழ்க்கையை கடந்து விடுவதாகவும், மழைக்காலத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.  வீடுகள் இல்லாததால் பிள்ளைகளை படிக்க கூட அனுப்ப முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் வேதனைப்படுகின்றனர்.

7 Years Of Maveeran Kittu: அதிகம் கவனம் பெறாத ஒரு வீரனின் கதை.. 7 ஆண்டுகளைக் கடக்கும் சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’!

சீர்காழி அருகே நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை இடித்த அரசு - வீடு இன்றி தவிக்கும் மக்கள்

கழிவறை இல்லாததால் பெண்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு தமிழக அரசு விரைந்து வீடுகளை கட்டி, கழிவறை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ED Officer Arrested : ’ED அதிகாரியை கைது செய்ய தமிழக DVAC-க்கு அதிகாரம் இருக்கிறதா?’ விதிகள் சொல்வது என்ன..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget