திருமணத்தில் இறந்த தந்தையை கண்முன் நிறுத்திய நண்பர்கள் - சீர்காழியில் நெகிழ்ச்சி
சீர்காழியில் நண்பரின் திருமண நிகழ்வில் இறந்த தந்தையின் உருவ படத்தை பரிசாக பெற்ற மணமகன் தந்தையின் பாசத்தால் மணமேடையில் கண் கலங்கிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
![திருமணத்தில் இறந்த தந்தையை கண்முன் நிறுத்திய நண்பர்கள் - சீர்காழியில் நெகிழ்ச்சி Mayiladuthurai news Friends brought his father who died at a friend's wedding in Sirkhazi TNN திருமணத்தில் இறந்த தந்தையை கண்முன் நிறுத்திய நண்பர்கள் - சீர்காழியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/f6b2631c872bbeb5f322d91ed784c3fd1697786689507733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஞ்ஞான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. மேலும் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக சமீப நாட்களாக இறந்தவர்களின் மெழுகு சிலை, இன்னும் சில பொருட்களால் உருவாக்கி அதை வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது சீர்காழியில் நடைபெற்றுள்ளது.
சீர்காழியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் நண்பர்கள் நண்பனின் திருமண நிகழ்வில் இறந்த அவரது தந்தையின் முழுவுருவத்தை வடிவமைத்து நண்பனின் திருமணத்தில் சர்ப்ரைஸ் அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாகராஜன் கடந்த 15 ஆண்டு முன் உயிரிழந்தார். இந்த நிலையில், நாகராஜின் இளைய மகன் ராஜ்குமாருக்கும், திருப்பங்கூரை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட ராஜ்குமார் தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் நண்பர்களிடம் அதனை கூறி கண் கலங்கியுள்ளார். தனது நண்பணின் ஏக்கத்தை போக்கும் வகையில், அவரது ஆசையை நிறைவேற்ற எண்ணிய நண்பர்கள் ராஜ்குமாரின் தந்தை நாகராஜின் உருவத்தை தத்ரூபமாக அவரது நண்பர்கள் தயாரித்து மணமகன் ராஜ்குமார் முன்பு நிறுத்தினர். அதனை கண்டு மகிழ்ச்சி ஒருபுறமும், தந்தையை நினைத்து மணமகன் ராஜ்குமார் கண்கலங்க, தொடர்ந்து அதனை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது, அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ராஜ்குமார், தந்தை நாகராஜியின் உருவத்தை பார்த்து கண்ணீர் விட தொடங்கிவிட்டார்.
TNPSC Recruitment: ரூ.1.30 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை; விண்ணப்பிக்க நாளையே கடைசி!
திருமணத்துக்கு வந்த உறவினர்களும் இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தர்.திருமண நிகழ்வில் பரிசுகள் ஆயிரம் வந்தாலும் நண்பர்கள் சேர்ந்து கொடுத்த இந்த ஒரு பரிசு திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்ப்பை பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)