சீர்காழி அருகே இருதரப்பு வியாபாரிகள் இடையே பிரச்சினை - காவல்துறையினர் சமரசம்
கொள்ளிடம் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் சங்கத்தின் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மற்றொரு தரப்பு வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் இணைந்து கொள்ளிடம் கடைத்தெரு வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். தொடர்ந்து இந்த சங்கத்தின் பதிவு புதுப்பிக்கப்படாத நிலையில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. செல்வராஜ் என்பவர் சங்கத்தை எடுத்து நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமச்சந்திரன் தலைமையிலான மற்றொரு வியாபாரிகள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கொள்ளிடம் கடைவீதி வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் கொள்ளிடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்ட சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த மற்றொரு தரப்பு வியாபாரிகள் தங்களது சங்கத்தின் பெயரையும், லோகோவையும் பயன்படுத்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கூட்ட நடைபெறும் அரங்கிற்குள் நுழைய முற்பட்டனர்.
SSC Exam in Tamil: முதல்முறை; இனி தமிழிலும் எஸ்எஸ்சி தேர்வை எழுதலாம்- மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் இக்கூட்டம் தொடர்பாக இருதரப்பு பிரச்சினை இருந்து வருவதால் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்ற மற்றோரு தரப்பினரை தடுத்து நிறுத்தினார். இதனால் காவல்துறையினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவில் இரு தரப்பினரும் தனித்தனியேகூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்ததை அடுத்து ஒரு தரப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கொள்ளிடத்தில் வணிகர்கள் இரு விரிவாக பிரித்து செயல்படுவது கொள்ளிடம் வர்த்தகர்களிடையே அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
Vijay Antony: பிச்சைக்காரன் 2 பட வெளியீட்டைத் தள்ளி வைத்ததால் மன உளைச்சல்.. விஜய் ஆண்டனி வேதனை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்