மேலும் அறிய

மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

பல்வேறு இடங்களில் சொட்டுநீர் பாசன முறையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணிநேரம் தொடர்கிறது. இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடைக் காலம் என்பதால் மின் நிறுத்தத்தின் காரணமாக ஏசி அல்லது மின் விசிறி இயங்காத காரணத்தால்  பொதுமக்கள் வெப்பம்  தங்காமலும், பள்ளி மாணவ மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது, அவ்வாறு திறக்கப்பட்டால் முறையாக வாய்க்கால்களை தூர்வார கடைமடை பகுதியான இப்பகுதிக்கு விவசாயிகளின் தேவையின் போது தண்ணீர் கிடைக்காமல் போவது, பருவம் தவறி பெய்யும் மழை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இம்மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக பருத்திக்கு சொட்டுநீர் பாசனம் முறையில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை முடிந்த பின்னர் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் இறங்கியுள்ளனர். சொட்டுநீர் பாசனம் முறையில் பருத்தி பயிரிட்டுள்ளனர். 

மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

கடந்த ஆண்டு 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் 7800 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலையான இதுவரை  இல்லாத அதிகபட்ச விலையாகும். இதன் காரணமாக, இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவிலான விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்தி பயிரில் களை வெட்டி, 15 நாட்களுக்குப் பிறகு யூரியா மேலுரம் இட்டு, தற்போது 30 நாட்களை கடந்துள்ள நிலையில் யூரியா, அடியுரம், டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து வைத்து பாரம் அடிக்கும் பருவத்தில் உள்ளது. ஆனால் மாவட்டத்தல் நிலவிவரும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக பாரம் அடிக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும், அண்மையில் 4 நாட்கள் பெய்த மழையால் பருத்திப் பயிர்களில் தண்ணீர் தேங்கியதாலும் பாரம் அடிக்கும் பருவம் கடந்துள்ளது. 

மயிலாடுதுறையில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

இந்த நிலையில் மேலும் விவசாயிகளை பாதிக்கும் விதமாக தற்போது நிலவும் தொடர் மின்வெட்டால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பருத்தி பயிர்கள் காய்ந்துவருகின்றன, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள்  மின்சாரம் வழங்காத தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக முன்புதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget