மேலும் அறிய

மகளிர் உரிமைத் தொகை கேட்டு குறைதீர் கூட்டத்தில் நுழைந்த பெண்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோட்டாட்சியர்கள் கள ஆய்வு செய்து விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

மயிலாடுதுறையில் குறைதீர் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை கேட்டு  குறைதீர் கூட்டத்தில் நுழைந்த பெண்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே பெரும்பாலான மகளிரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருந்தது.

Urvashi Rautela: 24 காரட் தங்க ஐஃபோனை காணவில்லை.. மோடி மைதானத்தில் தொலைத்த 'லெஜெண்ட்' பட நடிகை!

மகளிர் உரிமைத் தொகை கேட்டு  குறைதீர் கூட்டத்தில் நுழைந்த பெண்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இருந்த போதிலும் விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை பல்வேறு காரணங்களால் வழங்க படவில்லை. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ள பெண்கள் பல இடங்களில் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர். 

Rajinikanth - Vijay: “மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்” - லியோ குறித்து நடிகர் ரஜினிகாந்த் திடீர் பேட்டி!

மகளிர் உரிமைத் தொகை கேட்டு  குறைதீர் கூட்டத்தில் நுழைந்த பெண்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கூட்ட அரங்கில்  மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகளால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து மாவட்ட ஆட்சியர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆட்சியர் மகாபாரதி எழுந்து நின்று பெண்களிடம்  தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது.  கோட்டாட்சியர்கள் கள ஆய்வு செய்து விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

TN MRB Recruitment 2023: நர்சிங் தேர்ச்சி பெற்றவரா? 2250 பணியிடங்கள்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை கேட்டு  குறைதீர் கூட்டத்தில் நுழைந்த பெண்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இதனை ஏற்று பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில்  விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Acer Electric Scooter: லேப்டாப்பை தொடர்ந்து மின்சார பைக் மார்கெட்டில் குதித்த ஏசர் நிறுவனம் - MUVI 125 4G மாடல் விலை தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget