(Source: ECI/ABP News/ABP Majha)
மயிலாடுதுறை: நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் மலர் - செல்பி எடுத்து பிராத்தனை செய்த பொதுமக்கள்...!
’’தங்கவேலு என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் பகுதியிலிருந்து இந்த செடியை வாங்கி வந்து தனது வீட்டில் கவனமுடன் பராமரித்து வந்தார்’’
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டது. அத்து மட்டும் இன்றி இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும் சிறப்பு கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை. ஒரே செடியில் 20 க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது.
பிரம்மாவிற்கு உகந்த பூவாக கூறப்படும் பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண முடிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய புரிதல் இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகம் முதலியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி தங்கவேலு என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் பகுதியிலிருந்து இந்த செடியை வாங்கி வந்து தனது வீட்டில் கவனமுடன் பராமரித்து வந்தார். இந்த சூழலில் நேற்று இரவு அந்த செடியில் இரண்டு பூ மெல்ல மெல்ல மலரத் துவங்கியது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நள்ளிரவிலும் இதனை காண திரண்டனர். மேலும் செல்பி எடுத்தும், பிரார்த்தனை செய்தும் வழிப்பட்டனர்.
இது குறித்து அந்த செடியினை வளர்த்து வந்த தங்கவேலு கூறுகையில் ஏழு ஆண்டுகள் பொறுமையாக பக்குவத்துடன் இந்த செடியை வளர்ந்து வந்ததன் பயனாக இறைவனின் நாட்டத்தால் மலர் மலர்ந்துள்ளது என்றும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.