100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்
’’வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை கூலியாக பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்’’
![100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள் Manpower shortage due to 100 day work program - Northern workers engaged in paddy planting in Tanjore 100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/4c80dbc371eb930cda45ea1fb762d03b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்டா மாவட்டங்களில் நுாறு நாள் திட்ட பணிகளில், பிற பணிகளில், உள்ளூர் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், விவசாயப் பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள. விவசாய பணிக்கு ஆட்கள் பற்றைகுறை ஏற்படுவதால், 100 நாட்கள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு கட்டுமானம், பொருள்கள் விற்பனை என ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள். விவசாயப் பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, விவசாய பணிகளிலும் தங்களை தடம் பதித்துள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதிகளில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண் விவசாய கூலித் தொழிலாளர்கள் குழுவாக தங்கிருந்து, நெல் நடவுப் பணிகளை செய்து வருகிறனர்.
விவசாய கூலி பெண் தொழிலாளர்கள் நெல் நடவுப் பணிகளை மட்டுமே செய்வார்கள், அவர்களுக்கு நாற்றுகளைப் பறித்து தருவதற்கும், டிராக்டர் ஒட்டுவதற்கும், உரமிடும் பணிகளையும் ஆண் விவசாய தொழிலாளர்கள் செய்வார்கள், விவசாய பணிகளை ஆண் பெண் என தனியாக செய்த வருகிறார்கள். இதனால் ஏக்கருக்கு குறைந்தது 10 ஆயிரம் வரை செவாகும் நிலை உள்ளது. ஆனால் வெளி மாநிலமான மேற்குவங்க தொழிலாளர்கள், அவர்களாகவே, நாற்றுகளை பறித்து, உரமிட்டு, டிராக்டர்களை ஒட்டி, நடவுப் பணிகளை மேற் கொள்கின்றனர். இவர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை மட்டுமே கூலியாக பெறுகின்றனர். கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் அருகே சக்கரசமாந்தம், தென்னங்குடி, சீராளூர், கள்ளப்பெரம்பூர் என சுற்று வட்டார கிராமங்களில் 15 பேர் கொண்ட குழுவினர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளில் 4 முதல் 5 ஏக்கர் விதம், கயிறு கட்டி மிக இடைவெளி விட்டு, மிகவும் நேர்த்தியாக பணிகளை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து சக்கரசாமந்தம் சேர்ந்த விவசாயி கூறுகையில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர் நாற்றுகளைப் பறித்து, நடவு செய்கின்றனர். பணிகளை விரைந்தும், மிக நேர்த்தியாக செய்து முடித்து விடுகின்றனர். நமது பகுதியில் நிலவும் ஆள் பாற்றாக்குறை, சம்பளம் போன்ற பிரச்சனைக்கு இது ஒரு தீர்வு அமைந்துள்ளது. விலை உயர்வு கூலி பற்றாகுறையினால், பெரும்பாலான விவசாயிகள் மாற்று தொழிலுக்கும், திருப்பூர் போன்ற வெளி மாவட்டத்திற்கும் சென்று விட்டார்கள். இதனால் விவசாய பணிக்கு ஆய்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஆட்கள் இருந்தாலும், 100 நாள் வேலை இருப்பதால் யாரும் வருவதில்லை. வந்தாலும், அவர்கள் கூலியை உயர்த்தியும், பல்வேறு நிபந்தனைகளை தெரிவிக்கின்றனர். ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தர்கள், பேசிய பணம் கொடுத்தால், சொன்னபடி வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறார்கள் என்றார். மேற்கு வங்க விவசாய கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சீசன் நேரங்களில் சென்று நடவுப் பணிகளை மேற்கொள்வோம். அதன்படி இப்பகுதியில் விவசாயப் பணிகள் நடைபெறுவதால், இங்கு வந்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாய வேலை இல்லாத போது, கட்டிடம், மொசைக் போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்ப்போம் என்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)