இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரிக்கரையில் மணிமண்டபம் - முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரி கரையில் மணிமண்டபம் அமைக்க தமிழக முதல்வரிடம் விவசாயிகள் நேரில் கோரிக்கை
இயற்கை விவசாயத்தை எடுத்துரைத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரி கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக் கழகமும் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூருக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தஞ்சாவூர் மாவட்ட விவசாய பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, பல்வேறு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கான கோரிக்கை மனுவை வழங்கினர்.
அப்போது முதல்வரிடம் விவசாயிகள் கூறுகையில், இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் பரவலாக எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரி கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக் கழகமும் அமைக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் அவரை பற்றியும், அவர் இயற்கை விவசாயத்தை பற்றி கூறியதை பாடநுாலில் சேர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழுவினர் நேரில் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே முதல்வர் மத்திய அரசிடம் கோரி, விவசாயிகளுக்கான நிவாரணத்தையும், இழப்பீடையும் பெற்றுத் தர வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்பட்டால், உடனடியாக அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து அதற்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் ஆறு, வாய்கால்கள் உள்ளது. ஆனால் பம்புசெட் மின் இணைப்பு பெற 200 மீட்டர் தூரத்துக்குள்ளாக ஆறு, வாய்க்கால் இருந்தால் மின் பெற தடையாக உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் மீதமுள்ள விவசாயிகளும் முழுமையாக சாகுபடி செய்ய முடியும்.
மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ளவர்களுக்கும், தக்கல் திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளவர்களுக்கும், விவசாய பணிகளுக்கு வீட்டு உபயோக மின் கட்டணம் செலுத்தும் முறையை நீக்கி, இலவச மின்சார திட்டத்தை வழங்க வேண்டும். மின் மசோதாவை ரத்து செய்ய வேண்டும். ஏழை கூலி விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும்.பயிர் காப்பீடு திட்டத்தில் நிகழும் முறைகேடுகளை களைந்து வெளிப்படையாக இணையதளம் மூலம் அறிவிக்க வேண்டும். அரசின் நிவாரணங்கள், மானியங்கள் பெறும் விவசாயிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் பயனாளிகளின் பெயர்களை அந்தந்த கூட்டுறவு வங்கிகளில் ஒட்ட வேண்டும்.
திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டdaத் தொழிலாளிக்கு கத்திகுத்து
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.இந்த சந்திப்பின் போது, விவசாய சங்க பிரதிநிதிகள் வீரசேனன், சுந்தரவிமல்நாதன், வெ.ஜீவக்குமார், கோவிந்தராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் - இயற்கை வேளாண்மை செய்ய உறுதி மொழி ஏற்பு