இன்று ஒரே நாளில் 3 வேட்பாளர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்
தஞ்சாவூரில் இன்று தேமுதிக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என மூன்று வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று தேமுதிக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என மூன்று வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப்பிடம் வழங்கினர். இதில் முதல் வேட்பாளராக சுயேட்சை வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுதாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 3 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஜீவா நகரை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் விஜயகுமார் 46. இவரது மனைவி பெயர் சுமிதா 43. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். முதல் மகள் ஹெலன் 15, ஹனிகா 8 ஹர்ஷிகா 8 என்ற இரட்டை பெண் குழந்தைகள். இவர் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
திருக்காட்டுப்பள்ளியில் டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்துள்ள இவர் தனது ஆதரவாளர்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட தனது மனுவை கலெக்டர் தீபக் ஜேக்கப் இடம் தாக்கல் செய்தார். தஞ்சை நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் வேட்பாளராக விஜயகுமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 இம் ஆண்டு திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேமுதிக கட்சி வேட்பாளராக சிவனேசன் அறிவிக்கப்பட்டார். இவர் தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர்ருமான தீபக் ஜேக்கப்பிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்,
வேட்பாளர் விபரம்: பெ.சிவநேசன் (51) தஞ்சை மாவட்ட தேமுதிக முன்னாள் அவைத்தலைவர். தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்பு காரர் தெருவை சேர்ந்தவர்தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்பு காரர் தெருவை சேர்ந்தவர் தந்தை பெயர் த.பெருமாள், தாய்பெ.கல்யாணி, மனைவிசி.பவளகொடி, மகன்கள்சி.ஹரிசுதன், சி.வீரகபிலன். இவர் 2006-ல் தேமுதிக தஞ்சை மாவட்ட சட்டமன்ற உறுப்பினராக களம் கண்டவர். 2003 ஒருங்கிணைந்த மன்ற மாவட்ட இணை செயலாளர், 2006 மாவட்ட கழக பொருளாளர், 2012 மாவட்ட அவைத் தலைவராக கட்சிப் பொறுப்பில் இருந்தார். ஒப்பந்தக்காரர், எம்பி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. முன்னதாக தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகள் மற்றும் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து விட்டு தஞ்சை கலெக்டர் அலுவலகம் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெயபால் 52 தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கண்ணுகுடி கிழக்கு ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஐயாகண்ணு மகன் ஜெயபால் (52). இவரது மனைவி ராதா. இவரது மகன் ஸ்ரீதர் (19), ஜெயஸ்ரீ (17). இவர் பகுஜன் சமாஜ் கட்சி தெற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார். தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவதற்காக இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.