மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் தீபாவளியை ஒட்டி ரூ.9.42 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.9 கோடியே 42 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர். தீபம் என்றால் "விளக்கு" என்று பொருள். "ஆவளி" என்றால் "வரிசை" என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். 

தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். இத்தகைய சிறப்பான நாளில் மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கி மகிழ்வர். மேலும் வீடுகளில் இனிப்பு, பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வர். 

இப்படி சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் ஆடைகள், பட்டாசுகள், ஸ்வீட் விற்பனையை போல் மதுபான விற்பனையும் கல்லா கட்டி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் சுமார் ரூ.9 கோடியே 42 லட்சத்திற்கு மது பானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகள் உடுத்தி, வீடுகளில் பலகாரங்கள் செய்து, நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுற்றம் சூழ கோவில்களுக்கும், திரையரங்குகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்தனர்.

இதனால் ஆடைகள் விற்பனை, இனிப்புகள் விற்பனை, பலசரக்குப் பொருள்கள் விற்பனை, இறைச்சி விற்பனை ஆகியவை அதிகரித்தது. போக்குவரத்துக்காகவும் மக்கள் அதிகளவில் செலவிட வேண்டியிருந்தது. இதுமட்டுமா மதுப் பிரியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்காக பிற நாள்களை விட இது போன்ற பண்டிகை நாள்களில் அதிகளவில் மது பாட்டில்களை வாங்குகின்றனர்.

பண்டிகை காலம் என்றாலே மது பிரியர்களுக்குகென ஒரு தனி இடம் உண்டு. என்ன தான் புத்தாடை, கொண்டாட்டம் என்று இருந்தாலும், அந்த மதுவை சற்று உள்ளே தள்ளினால் மட்டுமே அவர்களின் நாள் முழுமை அடையும் என்ற நிலையில் தான் சில மது பிரியர்கள் உள்ளனர். பண்டிகைகாலங்களில் இது அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலம் வரும் போதெல்லாம், எவ்வளவு மது விற்பனை ஆனது? மதுபாட்டில்களின் எண்ணிக்கை என்ன? எத்தனை கோடிக்கு மது விற்கப்பட்டது? போன்ற விவரங்கள் வெளியாவது உண்டு.

பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் மதுவை வாங்குவதால் மது விற்பனையும் மற்ற நாட்களை காட்டிலும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் விற்பனை ஆகிறது. மது விற்பனையை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை லாபகரமான பண்டிகை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் விற்பனை சிறப்பாக நடக்கிறது. 

அந்த வரிசையில் தீபாவளிக்கு முன்பே கடந்த ஆண்டை விட விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் எண்ணிக்கையில் அதிகளவில் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ. 9 கோடியே 42 லட்சத்திற்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget