மேலும் அறிய
Advertisement
நாகையில் 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க "உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்" திட்டம் தொடக்கம்
கடத்தலுக்கு துணையாக இருக்கும் முக்கிய புள்ளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 24 மணி நேரமும் நேரடியாக புகார் அளிக்க "உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்" திட்டத்தை நாகை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடங்கி வைத்தார்.
சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஹர்ஷ் சிங் நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் , கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை இனி பொதுமக்கள் 24 மணி நேரமும் நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 8428103090 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்புகொண்டு எஸ்பியிடம் நேரடியாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சாராயம் கடத்துவதை கடத்தல்காரர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் கடத்தலுக்கு துணையாக இருக்கும் முக்கிய புள்ளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion