மேலும் அறிய
Advertisement
பாரதம் என பிராந்திய மொழியில் அழைப்பதில் தவறில்லை - கார்த்தி சிதம்பரம்
காங்கிரசை பொருத்தவரை நாங்கள் எம்மதமும் சம்மதம். அதற்கும் மேலாக மதச்சார்பின்மை கொள்கையை நாங்கள் நம்புகிறோம்.
தஞ்சாவூர்: பாரதம் என பிராந்திய மொழியில் அழைப்பதில் தவறில்லை. இந்தியா என்பதை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படும் என்று தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தஞ்சையில் இன்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: நடைமுறையில் குறிப்பாக பிராந்திய மொழியில் பேசும் பொழுது இந்தியாவை பாரதம் என அழைப்பது வழக்கம், அரசியல் சாசனத்தில் பாரதம் என்கிற வார்த்தை ஒரே ஒரு இடத்தில் தான் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக நாம் இந்தியா என்று தான் நமது நாட்டை அழைக்கிறோம்.
President of bharath என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பாரதம் என பயன்படுத்துவதில் தவறில்லை, இந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியங்கள் இருக்கும் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பாரதம் என மாற்றப்பட வேண்டும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பெயரை மாற்ற வேண்டும். தற்போது பாராளுமன்றம் கூட உள்ளது. ஆனால் என்ன அலுவல் என்று கூட சொல்லவில்லை அதனால் இந்த அரசு என்ன செய்யும் என்று தெரியவில்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு பாராளுமன்ற ஜனநாயகத்தில் இடமே கிடையாது. ஒரு அரசாங்கம் என்பது பெரும்பான்மை இருக்கும் வரை தான் அதன் காலம் இருக்கும் அல்லது ஐந்து ஆண்டு காலம் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மாநிலத்தில் ஓராண்டில் பெரும்பான்மை இழந்துவிட்டால் அங்கு தேர்தல் நடக்கத்தான் செய்யும்.
ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஒவ்வொரு காலகட்டம் இருக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு 4 தேர்தல் வருவது நல்லது என்பது எனது கருத்து. அப்படி இருந்தால் தான் மக்களின் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை அதை கொண்டுவர முயற்சி செய்தார்கள் என்றால் இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டி இருக்கும்.
உதயநிதி ஸ்டாலினுடைய கருத்தை நான் கவனமாக கேட்டேன். தமிழ்நாட்டில் பயன்படுத்தக்கூடிய அரசியல் இலக்கணத்திலே சனாதனம் என்றால் ஜாதி அடிப்படையில் இருக்கும் சமுதாய ஏற்ற தாழ்வுகளை தான் குறிக்கிறது. அதைத்தான் அவர் எதிர்த்து பேசினாரே தவிர அவர் எந்த மதத்தையோ எந்த மதத்தை நம்பிக்கை உடையவரையோ வழிபாடு செய்பவர்களையோ அவர் பேசவில்லை
காங்கிரசை பொருத்தவரை நாங்கள் எம்மதமும் சம்மதம். அதற்கும் மேலாக மதச்சார்பின்மை கொள்கையை நாங்கள் நம்புகிறோம். கருத்தை சொல்வதற்காகவே ஒருவரை நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை பேசிய ஒருத்தரை இன்னும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இரானிலே எப்படி ஹயத்துல்லாக்கள் இருக்கிறார்களோ அதுபோல் இந்தியாவில் இந்து ஹயத்துல்லாக்கள் நடத்தி வருவதாக இந்த பாஜக அரசு மூலம் நான் பகிரங்கமாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே தமிழ்நாட்டில் பாஜக முன்னணி தலைவரின் தலையை சீவிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என சொல்லி இருந்தால் இந்நேரம் சிபிஐ, ஈடி, என்ஐஏ என அனைத்து அமைப்பும் பாய்ந்திருக்கும். மாநிலத்தின் அமைச்சர் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தனிப்படை அமைத்து கைது செய்ய தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீரைப் பொறுத்தவரை அவர்களிடம் பேசி தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion