ஜாக்பாட் வேலை வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கு... விபரம் உள்ளே!!!
விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர், டெக்னீஷியன் உட்பட 12 மத்திய அரசு வேலைகள்!

தஞ்சாவூர்: 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலை வாய்ப்புங்க. ஆமாங்க அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. உடனே அப்ளை பண்ணுங்க!
விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர், டெக்னீஷியன் உட்பட 12 மத்திய அரசு வேலைகள்! மாதம் ரூ.59,600 வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025. எனவே காலதாமதம் செய்ய வேண்டாம். உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! பெங்களூரை மையமாகக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Visvesvaraya Industrial & Technological Museum - VITM) பல்வேறு காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் என்பதால், வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் நிச்சயம். மொத்தம் 12 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது, விண்ணப்பிக்கக் கடைசி தேதி அக்டோபர் 20, 2025.
அறிவிப்பில் மொத்தம் மூன்று முக்கியப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Exhibition Assistant 'A': இந்தக் காலியிடத்துக்கு விண்ணப்பிக்க, விஷுவல் ஆர்ட் / ஃபைன் ஆர்ட்ஸ் / கமர்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 1, மாதச் சம்பளம்: ரூ.59,600/-
2. Technician 'A': பத்தாம் வகுப்பு (SSC/10th) தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் (கார்பென்ட்ரி/ ஃபிட்டர்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்) ஐ.டி.ஐ (ITI) சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். சான்றிதழின் கால அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் தேவை. காலியிடங்கள்: 6, மாதச் சம்பளம்: ரூ. 38,908 /-
3. Office Assistant (Gr.III): இந்தப் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். அத்துடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 5, மாதச் சம்பளம்: ரூ.38,908/-
பணியிடங்களை பொறுத்து வயது வரம்பில் சற்று மாற்றம் உள்ளது. Exhibition Assistant 'A' மற்றும் Technician 'A' பதவிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். Office Assistant (Gr.III) பதவிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
பெண்கள், பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ.885 செலுத்த வேண்டும்
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.vismuseum.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக அவசியம். உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.





















