மேலும் அறிய

இளைஞர்களை குறி வைத்து விற்கப்படும் போதை காளான் - கொடைக்கானல் க்ரைம்..!

போதை வ‌ஸ்துக்க‌ளை விற்ப‌னை செய்வோரை க‌ண்ட‌றிய‌வும், பொது இட‌ங்க‌ளில் விற்ப‌னையில் ஈடுபடுவோர் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டுமென‌ கோரிக்கையும் எழுந்துள்ளது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க த‌மிழ‌க‌ம் ம‌ட்டுமின்றி கேர‌ளா, ஆந்திரா, கர்நாட‌கா உள்ளிட்ட ப‌ல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை த‌ருகின்றன‌ர். தொட‌ர் விடுமுறை ம‌ற்றும் வார‌ விடுமுறை நாட்களில் ஏராளமான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருவ‌து வ‌ழ‌க்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை  பெரும்பால‌னோரை ர‌சிக்க‌ வைக்கிற‌து,  வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். 

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்

இளைஞர்களை குறி வைத்து விற்கப்படும் போதை காளான் - கொடைக்கானல் க்ரைம்..!

இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு உணவு பழக்க வழக்கத்தை கடை பிடிப்பதும், குறிப்பாக சிலர் மது போன்ற போதை பழக்கவழக்கத்தையும் கொண்டுள்ளனர்.  கொடைக்கானலுக்கு வரும் வெளி நாட்டவர்களும் மது போன்ற போதை பழக்கவழக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

போதைப்பழக்கத்திற்குள்ளானவர்கள் க‌ஞ்சா ம‌ற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்ப‌னையும் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்துவோரின் எண்ணிக்கையும் த‌ற்பொழுது அதிக‌ரித்துள்ள‌து. சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா  பயணிகளை குறிவைத்து இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்னொரு பெர்யர் மேஜிக் மஷ்ரூம்  (தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு   நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.  

Foldable Iphone: வந்தாச்சு மாஸ் அப்டேட் - மடிக்கக்கூடிய ஐபோன் தயார், இவ்வளவு அம்சங்களா? இந்த விலையிலா? விவரம் இதோ

இளைஞர்களை குறி வைத்து விற்கப்படும் போதை காளான் - கொடைக்கானல் க்ரைம்..!

கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைக்காளான் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோர்க்கு போதை காளான் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த போதை பொருளின் பாதிப்புகள் தெரியாம‌ல் இளைஞ‌ர்க‌ள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழ‌ந்து விடுகின்ற‌னர்,  போதைகாளான் போன்ற போதை பொருள்க‌ளினால் உட‌லில் ப‌ல்வேறு பாதிப்புக‌ளும் எற்ப‌ட்டு ப‌ல‌ரும்  உயிரிழ‌ந்தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து.

கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவ‌ல்துறை சார்பில் ப‌ல்வேறு நட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌ட்டாலும் போதை பொருள் விற்ப‌னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற போதைவ‌ஸ்துக்க‌ளை விற்ப‌னை செய்வோரை க‌ண்ட‌றிய‌வும், பொது இட‌ங்க‌ளில் விற்ப‌னையில் ஈடுபடுவோர் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டுமென‌ கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
Embed widget