மேலும் அறிய

Foldable Iphone: வந்தாச்சு மாஸ் அப்டேட் - மடிக்கக்கூடிய ஐபோன் தயார், இவ்வளவு அம்சங்களா? இந்த விலையிலா? விவரம் இதோ

Apple Foldable Iphone: ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வகையிலான ஐபோன் தொடார்பான சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

Apple Foldable Iphone: ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோனின் விலை எவ்வளவு இருக்கலாம் என்ற தகவல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மடிக்கக்கூடிய ஐபோன்:

பிராண்ட் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், சர்வதேச அளவில் மொபைல் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதோடு, காலத்திற்கு ஏற்ப பயனாளர்களை கவரும் விதமாக, பல்வேறு மேம்படுத்தல்களையும் ஐபோன்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் குறித்து அண்மைக்காலமாகவே தகவல்கள் வெளிவந்த உண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள தகவல் அதன் வடிவமைப்பு மற்றும் விலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சாம்சங் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஐபோன் வடிவமைப்பு & கேமரா விவரங்கள்:

மடிக்கக்கூடிய ஐபோன் ஒரு புத்தக பாணி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தோராயமாக 7.8 இன்ச் மடிப்பு இல்லாத இன்னர் டிஸ்பிளே மற்றும் தோராயமாக 5.5 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே காட்சியைக் கொண்டிருக்கும். இது மடிக்கும்போது 9–9.5 மிமீ தடிமனையும் விரிக்கும்போது 4.5–4.8 மிமீ தடிமனையும் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் தடிமன், சந்தையில் தற்போதைய மிக மெல்லிய போனான 4.2மிமீ தடிமன் கொண்ட ஒப்போ ஃபைண்ட் N5-க்கு அருகில் வருவதை காண முடிகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் மடிக்கக்கூடிய ஐபோன் தயாரிக்கப்படும்.  இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும். இதன் முன்பக்க கேமரா மடிந்த மற்றும் விரிக்கப்பட்ட நிலைகளில் வேலை செய்யும். உள் இடத்தை சேமிக்க, ஃபேஸ் ஐடிக்கு பதிலாக டச் ஐடியுடன் கூடிய பக்கவாட்டு பட்டன் வழங்கப்படலாம். நிறுவனம் அதை AI அம்சங்களுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி பணிகள்:

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மடிக்கக் கூடிய ஐபோன் மாடலுக்கான விவரக்குறிப்புகளை இறுதி செய்யும் என்றும்,இந்த திட்டத்தின் உற்பத்தி பணிகள் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பெருமளவிலான உற்பத்தி 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய வடிவிலான ஐபோனை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தக் கூடும்.  ஐபோன் 18 சாதனங்களுக்குப் பிறகு கூட இது அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.  ஒரு வருடம் கழித்து, நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை மாடலையும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஃபோல்டபள் ஐபோனின் விலை என்ன?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் $2,000 முதல் $2,500 க்கு மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுவதன் மூலம், ஆப்பிளின் மிகவும் விலையுயர்ந்த ஐபோனாக இருக்கலாம். ஐபோன் பயன்படுத்துபவர் என்ற அந்தஸ்தை பெற விரும்புவோர் மற்றும் ஆப்பிளின் விசுவாசமான ரசிகர் பட்டாளம் காரணமாக, பிரீமியம் விலை இருந்தபோதிலும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து சந்தையில் வலுவான மாற்றாக ஆப்பிளின் மடிக்கக் கூடிய ஐபோன் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget