மேலும் அறிய

பன்னாட்டு கலாச்சார பெருத்திரளணி விழா - தஞ்சை அரசுப்பள்ளி மாணவிகள் 9 பேர் பங்கேற்பு

கர்நாடக மாநிலத்தில் நடக்கும் பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார விழாவில் மாவட்ட அளவில் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு உயர்நிலைப்பளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் 9 பேர் தேர்வாகி பங்கு கொள்கின்றனர்.

 கர்நாடக மாநிலத்தில் நடக்கும் பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருத்திரளணி விழாவில் மாவட்ட அளவில் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் 9 பேர் தேர்வாகி பங்கு கொள்கின்றனர். இதற்காக இன்று (19ம் தேதி) அம்மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகியோர் கர்நாடகா புறப்பட்டு செல்கின்றனர்.

நம்பிக்கை என்ற சாம்ராஜ்யத்தில் வெற்றி என்ற பாதையில் திறமையை சொத்தாக கொண்டு கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மி போன்ற கலைகளில் விருதும், சான்றிதழும் பெற்று மற்ற பள்ளிகளை மலைக்க வைத்து வருகின்றனர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவிகள். மாவட்ட அளவிலான பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தி சாதனை சுடராக ஒளிவீசுகின்றனர். திறமைகளை ஆயிரம் கரம் கொண்டும் மறைக்க முடியாது. ஆர்வ சிந்தனையை தூண்டி, முயற்சி எனும் விதைகளை நட்டால் வெற்றி என்ற விருட்சம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணமாக இப்பள்ளி மாணவிகள் உள்ளனர். இவர்கள் சாரண அமைப்பிலும் தங்கள் திறமைகளை காண்பித்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

பன்னாட்டு கலாச்சார பெருத்திரளணி விழா - தஞ்சை அரசுப்பள்ளி மாணவிகள் 9 பேர் பங்கேற்பு

அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரியில் உள்ள ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி விழா நடக்கிறது. இதில் 18 நாடுகளை சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பிரமாண்டமாக நடக்கும் இவ்விழாவில் தஞ்சை கல்வி மாவட்டத்தின் சார்பில் மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் பங்கு கொள்கின்றனர்.
விழாவில் இம்மாணவிகள் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆகியவற்றில் பங்கு கொள்வதற்காக தேர்வாகியுள்ளனர். இதற்காக மாணவிகளுக்கு இப்பள்ளி முன்னாளி மாணவி சண்முகி நடனப் பயிற்சி அளித்து வருகிறார்.

இம்மாணவிகள் சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் கர்நாடகாவிற்கு செல்கின்றனர். இவர்களுடன் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உயர்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் சிராஜுதீனும் செல்கிறார். இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார்.

இப்பள்ளி மாணவிகளை தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்க தஞ்சாவூர் மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட சாரண ஆணையருமான கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். தஞ்சை மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இப்பள்ளி மாணவிகள் மட்டும் தேர்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாணவிகள் 9 பேரும் இதற்கு முன்பாக மாவட்ட அளவில் நடந்த பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். பெரிய கோயிலில் நடந்த கலை விழா, தென்னக பண்பாட்டு மையத்தில் நடந்த விழா அரண்மனை வளாகத்தில் நடந்த புத்தகத் திருவிழா ஆகியவற்றில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கோலாட்டம், ஒயிலாட்டம் கரகம் போன்றவற்றில் பரிசுகளும் வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget