மேலும் அறிய

சாலை விபத்துக்களை முற்றிலும் குறைக்கணும்... பெரம்பலூர் கலெக்டர் களமிறங்கி நேரடி ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்: சாலை விபத்துக்களை முற்றிலும் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆதர்ஸ் பசேரா ஆகியோர் பல பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி – சென்னை, (சென்னை – திருச்சி) தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் விபத்துகளை முற்றிலும் குறைப்பதற்குத் தேவையான திட்டப் பணிகளான நில எடுப்பு, உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைப்பது மற்றும் வனத் துறையின் அனுமதி பெறுவது மற்றும் இதர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்டக் கலெக்டர் தலைமையில், மாவட்ட எஸ்பி முன்னிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், தேசிய நெடுஞ்சாலை டிராபிக் இன்ஸ்பெக்டர், மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்களுடனான கூட்டாய்வு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களான திருச்சி – சென்னை, தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பெரம்பலூர் 4 ரோடு மேம்பாலம் ஆரம்பமாகும் பகுதியில் மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவும், சாலையை அகலப் படுத்திடவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, செங்குணம் பிரிவு சாலை, எளம்பலூர் ரோவர் கல்லூரி அருகிலுள்ள இணைப்பு சாலை, வல்லா புரம் இணைப்பு சாலை பகுதி, மங்களமேடு காவல் நிலைய இணைப்பு சாலை, எறையூர் சர்க்கரை ஆலை இணைப்பு சாலை பகுதி, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள இணைப்பு சாலை, கல்பாடி பிரிவு இணைப்பு சாலை, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பிரிவு இணைப்பு சாலை ஆகிய இடங்களைப் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டார்.

தொடர்ந்து இப்பகுதிகளில் விபத்துகளை தவிர்ப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் அணுகு சாலைகளில் வேகத்தடை அமைப்பது, சாலையில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்றுதல், புதிய அணுகுசாலை மற்றும் சாலை அகலப்படுத்துதல், விபத்து எச்சரிக்கைக்காக சாலை ஒளிர்மின் விளக்குகள் அமைப்பது, கூடுதலாக புதிய உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்களுக்கும், தொடர்புடைய அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி செயல்படக் கூடிய கடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்துறையினர் கண்டறிந்து, முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.  மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றிலும் விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநர் பிரவீன் குமார், திருச்சி தேசிய நெடுஞ் சாலை பணிகள் ஆலோசகர் வேணுகோபால் ராவ், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ, திருச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் சத்தியமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கலைவாணி, தேசிய நெடுஞ்சாலைத் துறை இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் மற்றும் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget