மேலும் அறிய
Advertisement
தஞ்சாவூர் : உரிய அனுமதி பெறாமல் விற்பனை : 2 ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல். 7 பேர் கைது..!
வெளிமாவட்டங்களிலிருந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்கு உரிய அனுமதியின்றி 7 லாரிகளில் வந்த 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்
இந்த ஆண்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்து நெல்மணிகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காத காரணத்தினாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதன் காரணத்தினால், நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருந்தது. உடனடியாக அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்காக உரிய அனுமதியின்றி 7 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலைய பணியாளர்கள் துணையுடன் நெல்லை விற்பனை செய்வதால் உள்ளூரில் உள்ள விவசாயிகள் நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்ட வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வது தெரியவந்தால், கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் டிஎஸ்பி நல்லு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோட்டைச்சாமி, சிவசுப்பிரமணியன், மணிவண்ணன், கோபி, உதவி ஆய்வாளர்கள் சங்கீதா, முருகானந்தம், விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று வரை கண்காணித்தனர். அப்போது சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த 7 லாரிகளை மடக்கி விசாரித்தனர்.
விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளில் இருந்த 120 டன் எடையுள்ள 2 ஆயிரம் மூட்டை நெல்களையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த வினித்(23), மன்னார்குடியை சேர்ந்த சுதாகரன்(26), சேலம் மாவட்டம் தார்வாய் சுப்பரமணியன்(53), முரசுப்பட்டி சபாரெத்தினம்(35), அரியலுார் மாவட்டம் கீழபழூரை சேர்ந்த ராஜூவ்காந்தி(27), திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38), தர்மபுரி மாவட்டம் இந்தூரை சேர்ந்த ஆயப்பன்(31) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், 2 ஆயிரம் நெல் மூட்டைகளையும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்த்துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பிடிபட்டவர்களிடம் நெல் மூட்டைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யவா? அல்லது தனியார் அரவை மில்லில் விற்பனை செய்யவா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion