மேலும் அறிய

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்- இந்து சமய அறநிலையத் துறையினர் தொடர் ஆய்வு

சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையில் இருந்து வந்த  இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான சட்டை நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் உமையம்மை வழங்கிய ஞான பாலை அருந்தி தேவாரத்தில் முதல் பதிகத்தை பாடிய தலமான கோயிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் மேல கோபுர வாசல் அருகே நேற்று மதியம் யாகசாலை அமைப்பதற்காக குபேர மூலையில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுப்பதற்காக பள்ளம்  தோண்டப்பட்டது.

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்- இந்து சமய அறநிலையத் துறையினர் தொடர் ஆய்வு

அப்போது பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்தில் அரை அடி முதல் 2 அடி உயரமுள்ள 23 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து உடுக்கை, மணி, கலசம், சலங்கை, தீபத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 410 முழுமையான செப்பேடுகளும், 83 பிண்ணப்பட்ட செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகளை  பார்வையிட்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதனையடுத்து   மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம்  மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்து சிலைகளை பார்வையிட்டுஆய்வு செய்தனர்.

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்- இந்து சமய அறநிலையத் துறையினர் தொடர் ஆய்வு

மேலும் இதனை கருவூலத்திற்கு எடுத்துச்செல்ல தருமபுரம் ஆதீனம் மறுப்பு தெரிவித்த நிலையில், சிலைகள் செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வருவாய் துறைகளின் கண்காணிப்பில் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் 13-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும், இவை அனைத்தும் மதிப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது. 

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்- இந்து சமய அறநிலையத் துறையினர் தொடர் ஆய்வு

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சீர்காழி சட்டை நாதர் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் கீழ் செயல்படும்  திருக்கோயில் திருமடங்களின்  ஓலை சுவடிகள்,  செப்பேடுகள் பராமரிப்பு பாதுகாப்பு நூலாக்க திட்டப்பணி முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா,  சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர்  கொண்ட குழுவினர்  கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளை பார்வையிட்டு அவை எந்த ஆண்டைச் சார்ந்தது, யாரால் எழுதப்பட்டது.  என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறனர். 

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள்- இந்து சமய அறநிலையத் துறையினர் தொடர் ஆய்வு

முதற்கட்ட ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும், ஏழு புள்ளி அஞ்சு சென்டிமீட்டர் அகலமும் உடையதாக உள்ளது.  கோயிலில் உள்ள கல்வெட்டுகளில்  தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செப்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, முதன் முறையாக இங்கு நானூற்றுக்கும் மேற்பட்ட தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் என்ன பதிகங்கள் உள்ளன புதிய  தேவாரப் பதிகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கோயில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ரவிச்சந்திரன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் பத்ரி நாராயணன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Embed widget