TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam Scholarship: 2024- 2025ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.
ஆண்டுதோறும் 1000 ரூபாய் என்ற அளவில் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க நடத்தப்படும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (ட்ரஸ்ட்) மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்காக திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Exam)
2024- 2025ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் ₹1,000 உதவித்தொகை பெற, நவ.25ம் தேதிக்கு உள்ளாக தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவ மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும்.
2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மறறும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 -2025 கல்வியாண்டில் 9 - ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இந்தத் திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடம் இருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது https://tnegadge.s3.amazonaws.com/notification/TRUST/1731330681.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
* விண்ணப்பத்தைப் பூர்ச்சி செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/- தொகையையும் விண்ணப்பத்தையும் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* தேர்விற்கு விண்ணப்பிக்க நவம்பர் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இன்று கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
உதவித்தொகை எவ்வளவு?
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள் என 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித் தொகை ஆண்டுதோறும் ரூ.1000/ வீதம் வழங்கப்படும்.
அதே நேரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/