மேலும் அறிய

தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல் - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

’’முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்பல்’’

தஞ்சாவூரில் இந்து முன்னணியினருக்கும் இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினருக்கும் இடையே ஏற்பட இருந்த கைகலப்பு மற்றும் நேரடி மோதல் காவல்துறையினரின் தலையீட்டு தடுத்தாதால் தவிர்க்கப்பட்டது.

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் தங்கம் வைப்பு திட்டத்தில் வைத்து வருமானம் ஈட்டும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் திட்டத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி லக்கிம்பூர் கேரியில் படுகொலையான விவசாயிகளின் அஸ்தி கலயம் கடந்த 23 ஆம் தேதி சென்னை அடையாறு காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இன்று காலை தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடி வந்தடைந்தது.

தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல்  - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

அகில இந்திய விவசாய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் புதுக்குடியில் அஸ்தி பயணத்திற்கு வரவேற்பளித்து, 11.30 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10.30 முதல் ஐக்கிய விவசாய முன்னணியினர் அப்பகுதியில் கூடத் தொடங்கினர்.  அஸ்தி கலயம் தாங்கிய வாகனம் அங்கே வந்தடைந்ததை தொடர்ந்து, அதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் அங்கே கூடி காத்திருந்தனர். அப்போது, இந்து முன்னணி சார்பில் அங்கே நடைபெற்று கொண்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி  முடிவடையாததால் ஆத்திரமடைந்த  சிலர் இந்து முன்னணியினரை நோக்கி விரைந்தனர். இந்து முன்னணியினரும் வேட்டியை மடித்துக் கொண்டு கையில் கம்புகளை ஏந்தி எதிர்க்க தயாராகினர். இருதரப்பினரும் தாக்கி கொள்ள தயாராக நின்றனர். இதனால் அப்பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.

தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல்  - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

இந்து முன்னணியினர் வேண்டுமென்றே தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக  நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி அதற்கு அனுமதியளித்த போலீஸாரை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கே பாதுகாப்பு பணியிலிருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் துரிதமாக செயல்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே புகுந்து மிகவும் கஷ்டத்துடன் முயன்று இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து, லக்கிம்பூரில் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு  இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதுவும் ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கும் போலீஸார் அனுமதி அளித்ததே இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு காரணம் என இடதுசாரி இயக்கத்தை  சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை போலீஸார் மறுத்தனர். உண்மையில், பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்தான் காரணம் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த சம்பந்தப்பட்ட உள்ளுர் காவல் நிலையத்தில் மனு அளித்து, உரிய அனுமதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 10.30 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் எந்தவொரு அமைப்புக்கும் எத்தனை மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முடிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக போலீஸார் உத்தரவு வழங்குவதில்லை. இந்நிலையில், 11.30 மணிக்கு வந்த அஸ்தி கலய அஞ்சலி நிகழ்ச்சிக்கு இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் காலை 10.30 மணி முதல் அங்கே வரத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே உரிய அனுமதியுடன் நடைபெற்று கொண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முடிக்கச் சொல்லுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், அஸ்தி கலயத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் உள்ளுர் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை. இதுபற்றி கேட்டால், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டதாக சொல்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்? உள்ளுரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு கொடுத்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆவது மனு கொடுத்திருக்க வேண்டும். முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்புகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget