செம வாய்ப்பு... கோடிங், மெடிக்கல் பில்லிங் பற்றி அறிந்தவர்களா நீங்கள்: அப்போ இது உங்களுக்குதான்
பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழ்நாடு அரசு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவச பயிற்சிகள் வழங்கி வருகிறது.

தஞ்சாவூர்: மெடிக்கல் கோடிங், மெடிக்கல் பில்லிங் வேலையை பற்றி அறிந்தவரா நீங்கள்? அப்ப உங்களுக்கான செம சூப்பர் வாய்ப்புங்க இது. தமிழ்நாடு அரசு இதற்கான பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் செல்லலாம். மிஸ் பண்ணிடாதீங்க. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விளக்கமாக உங்களுக்காக.
பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழ்நாடு அரசு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவச பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளின் மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், மெடிக்கல் பில்லிங், மெடிக்கல் கோடிங் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது.
அத்தியாவசிய தேவையான மருத்துவ காப்பீடுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும், சர்வதேச அளவில் காப்பீடு மூலம் மருத்துவ சேவைகளை மக்கள் பெற்று வருகிறார்கள். காப்பீடு நிறுவனங்களிடன் இணைந்து, பயனர்களின் மருத்துவப் பதிவுகளை முறையான ஆராய்ந்து அவர்களுக்கான சேவைகளை செய்து தரும் முக்கிய இடத்தில் மெடிக்கல் பில்லிங் மற்றும் கோடிங் உள்ளன. இந்த பணியில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. உள்ளூர் பயனர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பணிகள் பெறப்படுகிறது.
அந்த வகையில் இப்பணிக்கு சென்னை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தகுதி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பெற்றிருந்தால் போதும். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் இளைஞர்கள் இத்துறை வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், இதற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் துறை இணைந்து, சாரா பிளாஸ் தொழில்நுட்பம் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சியை எந்தவித கட்டணமின்றி, 6 மாவட்டங்களில் வழங்குகிறார்கள்.
மருத்துவ பயனாளிகளின் விவரங்களை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப கோர்டு அளிப்பது, அதற்கான வழங்கப்பட்ட வழிமுறைகளை முறையான பின்பற்றுவது, மெடிக்கல் ரசீதை சரிபார்த்து, காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய தொகை செலுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த பயிற்சியில் கற்பிக்கப்படும்.
சரிங்க இதற்கு என்ன தகுதிகள் என்று கேட்கிறீர்களா? இப்பயிற்சியில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஏதெனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
சேலம், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி நேரடி வகுப்புகளாக நடைபெறும். மெடிக்கல் கோடிங் 210 மணி நேரம் மற்றும் மெடிக்கல் பில்லிங் 160 மணி நேர வகுப்புகளாக நடத்தப்படும். ஒமேகா, கிளாரஸ் ஆர்சிஎம், ஆப்டம், வீ ஹெல்த்டெக், கொரோஹெல்த், ஜாஸ் மெட்ஸ்பெட் (Omega, Clarus RCM, Optum, Vee Healthtek, Corrohealth, Jass Medsped) ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4825 மற்றும் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4826 என்ற இணைப்புகளில் மூலம் விண்ணப்பிக்கலாம். இடங்களுக்கு ஏற்ப அழைப்பு விடுக்கப்படும். இதற்கான வகுப்புகள் இன்று 8-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம். அந்தந்த மாவட்டங்களில் இடங்கள் இருப்பின் அடுத்தக்கட்ட தகவல் பகிரப்படும். அதே போன்று, இந்த இணையதளத்தில் பதிவு செய்து வைத்துகொள்ளுவதன் மூலம் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் இலவச பயிற்சிகளை குறித்து அறிந்து கொள்ளலாம்.
அரசு அளிக்கும் இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். எனவே காலதாமதம் இல்லாமல் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.





















