மேலும் அறிய

10வது தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கும் அட்டகாசமான வேலை வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வு இல்லாத அரசு வேலை! எழுத்தர், பியூன் உட்பட 5 காலியிடங்கள். நேர்காணல் மட்டும். 10 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: 10வது தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களுக்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. அட ஆமாங்க. உங்களுக்கு இது தீபாவளி பரிசு போல. விருதுநகர் கோர்ட்டில் பியூன், கிளார்க் வேலையை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கு.

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வு இல்லாத அரசு வேலை! எழுத்தர், பியூன் உட்பட 5 காலியிடங்கள். நேர்காணல் மட்டும். 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க.

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விருதுநகர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல், நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலருக்கும் ஏற்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட சேவைகள் ஆணையத்தில் மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (Assistant Legal Aid Defense Counsel) - 1
அலுவலக உதவியாளர் / எழுத்தர் (Office Assistant/ Clerk) - 1
வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Receptionist & DEO) - 1
அலுவலக பியூன் (Office Peon) - 2

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.

பியூன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் (SSLC Fail/Pass) விண்ணப்பிக்கலாம்.

எழுத்தர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். கணினி மற்றும் டைப்பிங் தெரிந்திருப்பது அவசியம்.

உதவி சட்ட ஆலோசகர்: குற்றவியல் சட்டத்தில் (Criminal Law) 1 முதல் 3 ஆண்டுகள் வரை வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://virudhunagar.dcourts.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, பதிவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ADR கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம்,  ஸ்ரீவில்லிபுத்தூர்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கடந்த 7.10.2025ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.10.2025ம் தேதி.

கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பித்து இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே உடனடியாக விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget