மேலும் அறிய

மாதிரி பள்ளித் திட்டத்தால் என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்கின்றனர் - அமைச்சர் அன்பில்மகேஷ் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர்கள் முன் மாதிரி கல்வித் திட்டம் வாயிலாக விழிப்புணர்வு பெற்று முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: அரசு பள்ளி மாணவர்கள் முன் மாதிரி கல்வித் திட்டம் வாயிலாக விழிப்புணர்வு பெற்று ஏராளமானோர் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு லேப்டாப்:

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM-T) தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களை சேர்ந்த 13 மாணவர்கள் பயில்கின்றனர். அம்மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக லேப்டாப்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

மாதிரி பள்ளித் திட்டத்தால் என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்கின்றனர் - அமைச்சர் அன்பில்மகேஷ் பெருமிதம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு:

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த முதன்மைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13 பேர் சேர்ந்துள்ளனர். எந்தெந்த நிறுவனத்தில் என்னென்ன படிப்புகள் உள்ளன? எதைப் படித்தால் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேரலாம் என்கிற விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி பள்ளித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்.ஐ.டி., ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம்.

வெளிநாட்டு கல்வி உதவித்தொகை:

மேலும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலுள்ள முதன்மைக் கல்வி நிறுவனங்களிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்க சேர்ந்து படிக்கின்றனர். வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை மூலம் தைவான் நாட்டில் தமிழக அரசு பள்ளியைச் சார்ந்த 2 மாணவர்கள் படிக்கவுள்ளனர்

இத்திட்டத்தை இன்னும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும், இதுபோன்ற விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் 1.25 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படாமல் விட்டுச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், 6 ஆயிரத்து 218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிதொழில்நுட்ப ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிநவீன மென்பொருள்கள் உள்பட முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா. சுதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சு.க. முத்துசெல்வம், முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்குமார் மற்றும் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
Chennai Rains: உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvarur News : தந்தை தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையாளர் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை!Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!Kamal Haasan Ulaga Nayagan | அஜித் பாணியில் கமல்! திடீர் அறிவிப்பு ஏன்? உலக நாயகன் 24 வருட பின்னணிEPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
Chennai Rains: உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
முன்னாள் அமைச்சர் மீது கொலைவெறித் தாக்குதல் - கொதித்தெழுந்த இபிஎஸ் - நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர் மீது கொலைவெறித் தாக்குதல் - கொதித்தெழுந்த இபிஎஸ் - நடந்தது என்ன?
யாருப்பா நீ? பல பெண்களுடன் உல்லாசம்; வெளியான 400 ஆபாச வீடியோக்கள்: வசமாக சிக்கிய அரசு அதிகாரி!
யாருப்பா நீ? பல பெண்களுடன் உல்லாசம்; வெளியான 400 ஆபாச வீடியோக்கள்: வசமாக சிக்கிய அரசு அதிகாரி!
“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!
“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!
Embed widget