மேலும் அறிய

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்... கலக்கப்படும் கழிவு நீர்

இந்தக் குளத்தின் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

தஞ்சாவூர்: மிகப் பழமை வாய்ந்த தஞ்சாவூர் சிங்கப்பெருமாள் கோயில் குளம் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டையுடன் உள்ளது இதை உடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சையில் அமைந்துள்ளது மிக பழமையான சிங்கப்பெருமாள் குளம். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பிற்காக  ஏலம் விடப்படு முறையான பராமரிப்போடு இருந்தது.  கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர்  குளத்தில் அதிகளவில் குப்பைகளை  கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தக் குளத்தின் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்... கலக்கப்படும் கழிவு நீர்

கழிவு நீரை கலந்து விடுவதற்காகவே கல்லணை கால்வாயில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை அடைத்து விட்டு புதியதாக வீட்டிலிருந்து நேரடியாக குளத்திற்கு கழிவு நீர் செல்வதற்கு குழாய் அமைத்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இக்குளத்தை வீட்டு கழிவு நீர் செல்வதற்காக பயன்படுத்தி  வருகின்றனர். இதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு சிலர் செய்யும் செயல்களால் குளம் முழுவதும் கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது என்று அப்பகுதி சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் இந்த குளக்கரை பகுதியில் விளையாடுவதும் வழக்கம்.

தற்போது குப்பைகளாலும், கழிவுகளாலும் சுகாதார சீர்கேட்டுடன் குளம் உள்ளதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் வயதானவர்களும் வசித்து வருகின்றனர். எனவே பழம்பெருமை வாய்ந்த இந்த குளத்தில் குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் கலக்க விடுவதையும் தடுத்து நிறுத்தி குளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து  முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்... கலக்கப்படும் கழிவு நீர்

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “ஒரு சிலர் செய்யும் தவறால் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்த பழம் பெருமை வாய்ந்த குளம் தற்போது சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதை சீரமைத்து கரைகளை பலப்படுத்த வேண்டும். தேவையான இடத்தில் கரைப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்தால் குளம் இன்னும் பெருமை மிகுந்ததாக மாறும்” என்றனர். 

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget