மேலும் அறிய

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

சீர்காழி  அருகே மடவாமேடு பகுதியில் மீன்பிடித்த போது நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்ததை அடுத்து தடை காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னலை சந்தித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீன்பிடிப்பில்  ஈடுபட்டனர். ஆனால் மீன் பிடி தடை காலம் முடிந்த பின்னர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை இதனால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் விஜய்.  இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் மடவாமேடு கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் நாராயணமூர்த்தி என்பவர் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து  நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு அதே படகில் ஏற்றி அவசர அவசரமாக மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

இதனையடுத்து தகவலறிந்த கடலோர காவல்துறை காவலர்கள் மடவாமேடு கடல்கரைக்கு விரைந்து வந்து நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர் நாராயண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடவாமேடு மீனவ கிராமம் மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

புயல்,வெள்ளம்,மழை என இயற்கை சீற்றம் எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் ஆகவே இருக்கின்றன. ஆண்டில் பாதி நாட்கள் புயல் வெள்ளம் மழை என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அரசு விதிக்கும் மீன்பிடி தடை காலம் காரணமாக இரண்டு மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் மீனவர்களுக்கு, இயற்கை சாதகமாக உள்ள காலகட்டத்தில் மட்டுமே தங்கள் உயிரை துச்சமென நினைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படகில் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம் போன்ற எதிர்பாராத காரணங்களால் படகுகள் விபத்துக்குள்ளாகும் படகிலிருந்து நிலைதடுமாறி மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதுபோன்று உயிரிழப்பு ஏற்படும் மீனவரின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்
38 நாட்களாகியும் வராத காவிரி நீர்! 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
38 நாட்களாகியும் வராத காவிரி நீர்! 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
நள்ளிரவு பயணத்திற்கு முற்றுப்புள்ளி... கும்பகோணம் - ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கணும்
நள்ளிரவு பயணத்திற்கு முற்றுப்புள்ளி... கும்பகோணம் - ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கணும்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget