நீரில் மூழ்கிய பயிர்களுக்கு 30,000 இழப்பீடு கேட்டு தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்
’’பொங்கல் பரிசுப் பொருட்களில் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் 21 பொருட்களில் தேங்காய் இடம் பெற வேண்டுகோள்’’
தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் மிகக் கூடுதலாக கடுமையான மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்களும், சம்பா நடவுக்காக பயிரிட்ட பயிர்களும் மழை வெள்ளத்தில் மூழ்கி அழிந்து போயுள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூடுதல் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட அளவில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட தலைவர் வீர மோகன் தலைமையில் வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விவசாய சங்கத்தின் தேசியசெயற்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம், விவசாய சங்க நிர்வாகிகள் சோ.பாஸ்கர்,சக்திவேல், மற்றும் சிபிஐ மாநகர செயலாளர் ஆர். பிமுத்துகுமாரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். கே. செல்வகுமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன்உள்ளிட்டோர் சாலை மறியலில் பங்கேற்றனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட கணவன் தற்கொலை
மத்திய அரசு வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கோரும் நிதியை குறைக்காது முழுமையாக வழங்கிடவும், அழிந்துபோன குறுவை, நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம், சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம், தோட்டப் பயிர்களுக்கு உரிய அளவு நிவாரணம், மனித இழப்பீடுகளுக்கு ரூபாய் 10 லட்சம், ஆடு மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம், வேலைவாய்ப்பு இழந்துள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு. ரூ. பத்தாயிரம் வழங்கிட வேண்டும், பொங்கல் பரிசுப் பொருட்களில் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் 21 பொருட்களில் தேங்காய் இடம் பெற வேண்டும், கூடுதலாக பொங்கல் இனாம் வழங்க வேண்டும், பொங்கல் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும், 20- 21 காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப்போன கிராமங்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கொள் முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள் முதல் செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் என்ற புதிய முறையை ரத்து செய்து பழைய முறையை தொடர வேண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்