மேலும் அறிய

தங்கத்தை மிஞ்சும் புகழ்... நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்: கலைநயத்தில் முதலிடம்

உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: விளக்குகள் என்றாலே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள  நாச்சியார்கோவில் விளக்குகள்தான் என்று சட்டென்று பட்டாசு வெடித்தது போல் பதில் வரும். அந்தளவிற்கு தரமும், கலைநயமும் மிக்கவைதான் நாச்சியார்கோவில் விளக்குகள்.

உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர். கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு தொடங்கப்படுகிறது.


தங்கத்தை மிஞ்சும் புகழ்... நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்: கலைநயத்தில் முதலிடம்

விளக்குகள் என்றாலே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள  நாச்சியார்கோவில் விளக்குகள்தான் என்று சட்டென்று அனைவரும் கூறிவிடுவர். இங்கு பரம்பரை பரம்பரையாக குத்துவிளக்கு தயார் செய்து வருகின்றனர். தமிழக அளவில் ஐம்பொன் சிலைக்கு சுவாமிமலை,  பாத்திரங்களுக்கு கும்பகோணம், வெற்றிலைக்கு ஆவூர் எப்படி சிறப்போ அதுபோல் நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு என்றால் தனி மவுசுதான்.

இங்கு தயார் செய்யப்படும் பித்தளை குத்து விளக்குகள் பாரினுக்கும் பறக்கிறது. முக்கியமாக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூருக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் வாங்குகின்றனர். கும்பகோணம் வரும் பக்தர்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி நாச்சியார்கோவிலுக்கு சென்று குத்துவிளக்கு வாங்காமல் செல்வதில்லை. காவிரி ஆற்றின் படுகை மண் ஐம்பொன் சிலை வார்ப்பு எடுக்க உகந்தது. இதனால்தான் சுவாமிமலையில் ஐம்பொன் சிலை செய்யும் ஸ்தபதிகளை மாமன்னன் ராஜராஜசோழன் குடியமர்த்தினார். அதேபோல் தான் பித்தளை குத்து விளக்கு தயார் செய்வதற்கு நாச்சியார்கோவில் சேப்பங்குளம் மற்றும் அரசலாற்றின் படுகை மண்தான் உகந்தது. 250 கிலோ பித்தளை, 50 கிலோ செம்பு காய்ச்சினால் ஒரு அடி குத்துவிளக்கு 90 எண்ணிக்கையில் தயாரிக்கலாம் என்கின்றனர். 6 அடி விளக்கு 6 எண்ணிக்கையில்தான் செய்ய முடியும். ஒரு குத்துவிளக்கு செய்ய குறைந்தது 6 நாட்களாகும்.  நிலையான விளக்கு என்பதுதான் காலப்போக்கில் மருவி குத்துவிளக்காகி விட்டது. குடும்பத்தில் உள்ளவர்கள் எக்காலத்திலும் நிலையாக இருக்க வேண்டும் என்பதால்தான் நிலை விளக்கு என்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாச்சியார்கோவிலில் காமாட்சி விளக்கு, அன்னபட்சி விளக்கு, தாமரை விளக்கு, பன்னீர் சொம்பு விளக்கு, கிளி விளக்கு, நவமுக  அலங்கார விளக்கு, ஏகதீப விளக்கு, பஞ்சமுக தீப விளக்கு, பட்டை விளக்கு, குபேர விளக்கு, சங்குசக்கர விளக்கு என 15க்கும் அதிகமான விளக்குகள் தயாரிக்கின்றனர்.

உலகத்தை காத்துவரும் பஞ்ச பூதங்கள் குத்து விளக்குகளில் இருக்கிறது. நீர் எண்ணெயாகவும், நிலம் மண்ணாகவும், நெருப்பு தீபமாகவும்,  காற்று புகையாகவும், ஆகாயம் ஒளியாகவும் இருக்கிறது. இதனால் பஞ்சமுக தீபத்தை வடிவமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குத்துவிளக்குக்கு  அன்னபட்சி, தகழி, கும்பாசம், மேத்துண்டு, வாழைப்பூ, காய், தட்டு ஆகிய ஏழு பாகங்கள் உண்டு.

இதில் மேத்துண்டு, வாழைப்பூ, காய் பகுதிகளுக்கு கரு வைக்காமல் வடிவமைத்தால் எடை அதிகமாகி தூக்குவதற்கு சிரமம் என்பதால் கரு  வைத்து வடிவமைப்பர். பிறை, தகழி, தட்டு, கும்பாசம் ஆகிய மூன்று பாகங்களுக்கு கரு வைக்காமல் நேரடியாக பித்தளை செம்பு ஊற்றி  வடிவமைப்பர்.

நாச்சியார்கோவில் குத்துவிளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இந்த உலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Embed widget