மேலும் அறிய

அவர்கள் இவர்கள்... கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் கல்வெட்டில் இடம் கொடுத்த மாமன்னர் ராஜராஜ சோழன்

வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும், புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அதுபோல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது பெரிய கோவில்.

தஞ்சாவூர்: அவர்கள் இவர்களே என்று பெரிய கோயிலை கட்ட உறுதுணையாக நின்ற கட்டிடக் கலை நிபுணர்கள் இருவரின் பெயரை கல்வெட்டில் பொறித்து பெருமை சேர்த்துள்ளார் மாமன்னர் ராஜராஜ சோழன்.

இன்றும் உலகம் மாமன்னர் ராஜராஜனை புகழ்ந்து போற்றுகிறது. அவர் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோயில் உலக புகழ் பெற்று விளங்குகிறது. இத்தனை பெருமைகளை பெற்ற மாமன்னர் ராஜராஜசோழன் பெரிய கோயிலை கட்ட உறுதுணையாக நின்ற கட்டிடக் கலை நிபுணர்கள் குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர் பெயரை கல்வெட்டில் செதுக்கி அவர்களையும் பெருமைப்பட வைத்துள்ளார்.


அவர்கள் இவர்கள்... கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் கல்வெட்டில் இடம் கொடுத்த மாமன்னர் ராஜராஜ சோழன்

பெரிய கோவிலை ராஜராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தார். அதற்கு காரணம் என்ன தெரியுங்களா? வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும், புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அதுபோல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது பெரிய கோவில். அதனால்தான் ராஜராஜன் தட்சிண மேரு என்று அழைத்ததாக கூறப்படுகிறது.

பெருமைமிகு, அனைவரும் வியந்து போற்றும் பெரியகோவிலை கட்டுவதற்கு ராஜ ராஜ சோழனுக்கு மிக்க உறுதுணையாக நின்றவர்கள் யார் என்று தெரியுங்களா. ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை, குரு – கருவூர் சித்தர், படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்.

அதெல்லாம் சரிதான் இத்தனை நுணுக்கமான அற்புதமான கோயிலின் கட்டிட நுட்பத்திற்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே. அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் பெயரையும் தவறாமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜராஜ சோழன். அந்த கட்டிட நிபுணர்கள் குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்தான்.

பெரிய கோவிலில் உள்ள மற்ற சில அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை. பிற்காலத்தில் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்க்கது.

ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. கல்வெட்டுகளில் 400 ஆடல் அழகிகளின் பெயர்களும், அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிய செய்துள்ளார் ராஜராஜ சோழன். இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவரது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வெட்டுகளில் உள்ள சில ஆடல் அழகிகளின் பெயர்கள் பற்றி பார்ப்போம். சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, இரவிகுல மாணிக்கம், மாதேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி,  அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி என்று பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம் தானே. இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் சோழ மன்னர்கள் பின் தங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget