தக்காளி விலை உயர்வு எதிரொலி - தஞ்சையில் கூட்டுறவு துறை மூலம் விற்கப்படும் தக்காளிக்கு மவுசு
தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்கெட்டில், தக்காளி கிலோ 130 என விற்பனையானது
தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை காவேரி சிறப்பு அங்காடியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு கூறுகையில், தமிழக முதல்வரி் ஆணைக்கு ணங்க கூட்டுறவுதுறையின் மூலம் பண்ணை நல பசுமை மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.140 அளவில் விற்பனை செய்யப்படும் நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமையகத்தில் அமைந்துள்ள பண்ணை பசுமை அங்காடி, கொடைக்காரத்தெரு கரந்தை, ஜெயேந்திரா பள்ளி வடக்கு தெரு, வடக்குவீதி , வடக்குவீதி, ஏ.ஒய்.ஏ. ரோடு வடக்கு வீதி, ஐய்யங்கடைத்தெரு தமதம மேடை, காமராஜர் ரோடு, சீனிவாசபுரம், ஏ.ஒய்.ஏ. கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், வண்டிக்காரதெரு, புதிய ஹவுசிங் யூனிட், காமராஜர் ரோடு சீனிவாசபுரம், கும்பகோணத்தில், பாலக்கரை, பாட்ராச்சாரியார் தெரு, சிங்காரம் செட்டிதெரு, செல்வம் தியேட்டர் எதிர்புறம், நால்ரோடு அருகில் ஆகிய இடங்களிலும், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் ரோடு, பாளையம் மற்றும் கரிக்காடு காந்தி நகர் ஆகிய இடங்களில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளிகளை வாங்கி பயனடையவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, துணைப்பதிவாளர் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழை காரணமாகச் சில வாரங்களாகத் தக்காளி வரத்து குறைந்தததால், தற்போது தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்கெட்டில், தக்காளி கிலோ 130 என விற்பனையானது. இந்நிலையில், தக்காளியைப் போல மற்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகவே இருந்தது. நாட்டுக் கத்திரி, வெண்டைக்காய், அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், முள்ளங்கி, அவரக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் விலை ஏறியுள்ளது. தொடர் மழை காரணமாக அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டதால், மழையினால் காய்கறிகள் பெரும்பாலும் சேதமடைந்து விட்டது. இதனால் உற்பத்தி குறைந்ததால், விலை உயர்வுக்குக் காரணம். இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால், வரலாறு காணாத அளவில் காய்கறிகள் விலை உயரும் என்றார்.