தஞ்சை : 12 பெண் போலீசாருக்கு ஓட்டுநர் உரிமம்
2 பெண் போலீசாருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினார். அவர்களிடம் வாகன சாவியை வழங்கி, தைரியமாக இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தஞ்சையில் 12 பெண் போலீசாருக்கு ஓட்டுநர் உரிமம்
டிஐஜி வழங்கினார்
மரக்கன்றுகளை நட்ட போலீசார், டிஐஜி, எஸ்பி ஆகியோர், தடைகளை தகர்த்தெரிவோம் என்ற உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் வகையில், கண்ணாடியில் தங்களது உள்ளங்கையை வர்ணம் பூசி உள்ளங்கையை தடம் பதித்தனர்
அமெரிக்காவின் தொழிற் புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள், ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 நாளை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
1911 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்ச்சியை அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்பட யிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்காகவே கொண்டாடப்படும் தினத்தை முன்னிட்டு தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் உலக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்பி ரவளிப்பிரியா தலைமை வகித்தார். டிஐஜி கயல்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அலுவலக முன்பு பெண் போலீசாரால் நடப்பட்ட, பயன் தரக்கூடிய மா, பலா, செம்மரம், புங்கன் உள்பட பல்வேறு வகையான 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள், திருடப்பட்ட நகைகளை கண்டுபிடித்தவர்கள் உள்ளிட்ட போலீசாருக்களுக்கு நினைவு பரிசையும், பாராட்டு சாண்றிதழ்களையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, 12 பெண் போலீசாருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினார். அவர்களிடம் வாகன சாவியை வழங்கி, தைரியமாக இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. முன்னதாக மரக்கன்றுகளை நட்ட போலீசார், டிஐஜி, எஸ்பி ஆகியோர், தடைகளை தகர்த்தெரிவோம் என்ற உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் வகையில், கண்ணாடியில் தங்களது உள்ளங்கையை வர்ணம் பூசி தடம் பதித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் பிருந்தா, ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.