மேலும் அறிய
Tiruvarur: ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருவாரூரில் திமுகவினர் மௌன அஞ்சலி
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி ஒடிஷாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படும் என திமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டு 238 பேர் உயிரிழந்த நிலையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்வதாகவும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகளை பார்வையிட செல்ல உள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உத்தரவின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் ஒன்றிய குழு தலைவர் தேவா தலைமையில் கார்த்திக் என்பவரது உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலிவலத்தில் ஒன்றிய குழு தலைவர் தேவா தலைமையில் ஏராளமான திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு நன்மைகளை செய்தவர் என்றும் இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 233 பேர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பலர் காயமடைந்துள்ளனர் அவர்கள் விரைவாக குணமடைய வேண்டிய உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டு மௌன அஞ்சலி அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் செலுத்த வேண்டும் எனவும் ஒன்றிய குழு தலைவர் தேவா பேசினார் இதன் காரணமாக காலை முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தி அழைத்துச் சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பட்ஜெட் 2024
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion