மேலும் அறிய

உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

திருட்டு தொடர்பாக புகார் அளிக்க வந்தவர்களை எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். இவர் கிளியனூரில் மளிகை கடை வைத்து நடத்திவருகிறார். இந்நிலையில் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அவர் வீட்டு பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் காரின் பதிவு புத்தகம் ஆகியவை காணாமல் போயுள்ளது. 

உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

இதில் தன்னிடம் கார் ஓட்டி வந்த முகம்மது நபி மீது சந்தேகம் ஏற்பட்டு ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து, ஊர் தலைவர் முன்னிலையில் நடத்திய விசாரணையில் வாகனத்தின் ஆர்சி புக்கை திருடியதை ஒப்புக்கொண்ட முகம்மது ரபி, காணாமல் போன நகைக்கும் சேர்த்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 2 மாதங்களுக்குள் திருப்பி தருவதாக கூறியுள்ளார். 

உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

இதையடுத்து, ரபியை பெரம்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார். மறுநாள் இரவு முகம்மது பஷீர் வீட்டுக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் முன்னுக்குப்பின் தவறான தகவல்களை மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாகவும், இதனால் பஷீரின் மனைவி 9 மாத கர்ப்பிணியான பாத்திமா ஜீபேரியா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து, அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தை இறந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள முகம்மது பஷீர்,  இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

அந்த புகார் மனுவில் நகை மற்றும் வாகனத்தின் பதிவு புத்தகத்தை திருடிய முகம்மது ரபி மீதும், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் ரபீக்குக்கு ஆதரவாக செயல்பட்டு, கர்ப்பிணி பெண்ணை விசாரணை செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான பெரம்பூர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் காவலர் கர்ப்பிணி பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரகளையில் ஈடுபட்ட குடிபோதை கும்பல்... தட்டிக்கேட்ட போலீசுக்கு சரமாரி கத்திக்குத்து!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!

ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 

Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்

Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?

உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Embed widget