ரகளையில் ஈடுபட்ட குடிபோதை கும்பல்... தட்டிக்கேட்ட போலீசுக்கு சரமாரி கத்திக்குத்து!
சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட போலீசை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சக்திவேல். இவர் திருவாரூர் மாவட்டம் இடையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி நிலையில் தற்போது கடலோர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் விடுப்பில் சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் காத்திருப்பு பெட்ரோல் பங்க் அருகே சிலர் குடிபோதையில் சாலையோரம் நின்றபடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சக்திவேல் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, காவலர் சக்திவேல் வீட்டிற்குச் செல்லும் வழியில் நின்றுள்ளனர். அப்போது குடிபோதை ஆசாமிகள் காவலர் சக்திவேலை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு விரைந்த பாகசாலை காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் பிரச்சனையில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட காவலரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று பல பகுதிகளில் குடிகாரர்களின் அத்துமீறல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தட்டிக் கேட்கும் பொதுமக்கள் தாக்கப்படும் நிலை நிலவி வருவதாகவும், இதனால் பலரும் இவர்களின் செயலை தட்டிக்கேட்க முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Valimai Update | வலிமையில் முரட்டு சிங்கிளா அஜித்! அப்போ காலா நாயகிக்கு இந்த ரோலா?
இந்த சூழலில் தட்டிக்கேட்ட காவலரை கத்தியால் குத்தி உள்ள சம்பவம் நடந்தேறி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வண்ணம் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல்துறையினரின் ரோந்து பணியினை அதிக படுத்தினால் மட்டுமே இதுபோன்று பொதுவெளியில் குடித்துவிட்டு பிரச்சனையில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த முடியும் வேண்டும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் வாபஸ் உத்தரவு புதுச்சேரி அரசுக்கு அவமானம்’- நாராயணசாமி வேதனை...!