மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தப்படுகிறதா? - கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆய்வு செய்த பள்ளிக்கல்வி ஆணையர்
சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவதும், காலி பாட்டில்களை உடைத்து விட்டு செல்வது குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சமணி ஆணையரிடம் விளக்கி கூறினார்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பள்ளியின் ஒரு வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் நந்தகுமார் வகுப்பின் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதையும், அதை மாணவர்கள் எவ்வாறு கவனித்து புரிந்து கொள்கிறார்கள் என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு அதனை இடித்து அகற்றிடவும், புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் அறிவுறுத்தினார். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவதும், காலி பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால் மாணவர்கள் பாதிப்படைவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சமணி ஆணையரிடம் விளக்கி கூறினார்.
ஆய்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பள்ளிகள் சரியாக இயங்காத சூழலில் தற்போது பள்ளிகள் வழக்கம்போல இயங்க துவங்கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்கும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், கல்வி தரம் உயர்த்துவதும் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Maternity Leave for Students | கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
அரசுப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவது குறித்து மாற்றாக புதிய கட்டிடங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, பள்ளிக் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கவும் ஆய்வின்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், மாவட்டங்களில் உள்ள குறை நிறைகள் குறித்து சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரிவித்து மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில், செம்பதனிருப்பு உள்ளிட்ட ஊர்களிலுள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், சீர்காழி வட்டாசியர் சண்முகம், தலைமை ஆசிரியர் பிச்சைமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
செல்வராகவன் படத்திலிருந்து விலகிய பிரபலம்.. செம்ம ஷாக்கில் படக்குழு...
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்