புதுசு கண்ணா புதுசு... விதவிதமான கேக்குகள் விற்பனை: குவியும் மக்கள் எங்கு தெரியுங்களா?
அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி உயர் தரத்தில் விலை குறைவான கேக் வகைகளை விற்பனை செய்கின்றனர்.

தஞ்சாவூர்: கிறிஸ்துமஸ் விழா நாளை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்துவ மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட நடுத்தர மக்கள் பேக்கரிகளில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் அசத்தல் விலையில் கேக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பக்காலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை. ஆனால் அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.
கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட்களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை. கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன. அவ்வாறு காலம் செல்ல செல்ல பல்வேறு வகையான கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் விழா என்பது அனைத்து தரப்பு மக்களும் உற்சாக கொண்டாட வேண்டும் என்பதுதான் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. இதற்காக உயர்தரத்தில் குறைந்த விலையில் பல்வேறு கேக் வகைகளை மக்களுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூரில் குடிசைத் தொழிலாக பலகார தொழிலை ஆரம்பித்து, இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி உயர் தரத்தில் விலை குறைவான கேக் வகைகளை விற்பனை செய்கின்றனர். பாரம்பர்யமான இனிப்புகள் மற்றும் கார வகைகளை, வீட்டில் செய்வதை போல பக்குவமாக தயாரித்துக் கொடுத்து, மக்கள் மனதில் இனிப்பாய் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தற்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக பிளம்கேக், ரிச் பிளம் கேக்ஸ் மினி கிப்ட் பாக்ஸ், சிறிய அளவிலான டின் பாக்ஸ், மீடியம் கிப்ட் பேக், கிராண்ட் டின் பாக்ஸ், நட்ஸ் வகைகள் ஆகியவற்றை குறைவான விலையில் உயர்தரத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக கிறிஸ்துமஸ் பக்கெட் பேக் ஒன்று உள்ளது. இதில் ப்ளம் கேக், ஓட்ஸ் குக்கீஸ், மைசூர்பாகு, அதிரசம், மிக்சர், கை முறுக்கு, மினி தட்டை போன்றவை அடங்கியதாகும். இதேபோல் கிப்ட் ஹாம்பராக ரிச் பிளம் கேக், குக்கீஸ், மோதி லட்டு, காராமணி தட்டை, தேன்குழல் முறுக்கு, நேந்திரம் சிப்ஸ் அடங்கிய பேக் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவை அனைத்து உயர்தரத்தில் நம் வீட்டில் எவ்வாறு செய்வோமோ அதேபோல் செய்துள்ளனர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.





















