மேலும் அறிய

நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை

’’தேர்தல் பரப்புரையின் திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்’’

சோழமன்னர்களின் பண்டைய தலைநகரமாக கும்பகோணத்தை அடுத்த பழையாறை ஒருகாலத்தில் திகழ்ந்தது. 1789 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை 5 தாலுகாவிற்கு ஒரு தலைநகரம் என கும்பகோணம் தலைநகரமாக விளங்கியது.  அதே போல் கடந்த 1806 ஆம் ஆண்டு முதல் 1863 ஆம் ஆண்டு வரை  திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு மாவட்ட நீதிமன்றம் கும்பகோணத்தில் செயல்பட்டு வந்தது. இன்றும்  மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றகள், மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களாக செயல்பட்டு வருகிறது.

கும்பகோணம் நகரம் கடந்த 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக தமிழகத்தில் குறிப்பிடப்படும் நகராட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.  12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்  உலக புகழ்பெற்ற மாசி மகாமகமும், வருடந்தோறும் நடைபெறும் மாசிமகமத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமககுளத்தில் புனித நீராடி செல்வார்கள். இதே போல் உலகத்தில் முதன்முதலாக தோன்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில், 74 லட்சம் கோடி மந்திரங்களை உள்ளடக்கிய மங்களாம்பிகையம்மன் உள்ள 12 சிவன் கோயில்களும், 5 பெருமாள் கோயில்கள் என கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன, நவக்கிரஹ, பரிகார கோயில்கள் உள்ளன.  சோழர் காலத்தில் எச்சங்கள் மிச்சங்களும் உள்ளதால், தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாடு, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.

நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை

அதே போல் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி நாகை மாவட்டம் வரை சேவையை இன்றும் வழங்குகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது.  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகம் கும்பகோணத்தில் செயல்படுகிறது. அதே போல் வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது.  கும்பகோணம் மறைமாவட்டம் என்பது தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கி, நாமக்கல் வரை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அதே போல் தனியார் நிறுவனங்களான சிட்டி யூனியன் வங்கியின் தலைமையிடம், இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் தலைமையிடம் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

பாரம்பரியமும், வரலாற்று பின்னணியும் கொண்டுள்ள கும்பகோணத்தில் கைவினைப் பொருட்களான ஐம்பொன் சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள் என நாள்தோறும் லட்சகணக்கான ரூபாய்க்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல் கும்பகோணம் வெற்றிலை, நெய் சீவல் உள்ளிட்ட சிறப்புகளாகும். கும்பகோணத்தில் நாள்ஒன்றுக்கு 50 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதால், பிரபலமான நகை நிறுவனங்கள் அனைத்தும் கும்பகோணத்தில் விற்பனையை தொடங்குகின்றனர். இவை மட்டுமல்லாமல் நாள்தோறும் கும்பகோணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது.

மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தஞ்சையை பிரித்து கும்பகோணம் தனிமாவட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்ற உறுதியளித்தார்.  ஆனால் அதன் பின் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கோலம் வரைதல், மனு அனுப்புதல் போன்ற பல்வேறு விதமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தெரிவித்தார். ஆனால் பதவி ஏற்று, பல நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் இருந்து வருகிறார்.  ஆனால், கும்பகோணத்தை தனி மாநகராட்சியாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 

எனவே, தஞ்சைக்கு வரும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை, நேரில் சந்தித்து, கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்றும், 25 ஆண்டுகளாக போராடி வருவது குறித்து வலியுறுத்த உள்ளோம் எனவே, முதல்வரை சந்திக்க ஒப்புதல் பெற்று தர வேண்டும் என   போராட்ட ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்  கல்யாணசுந்தரம்,  அரசு கொறடா கோ.செழியன்,  எம்பி ராமலிங்கம்,  எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget