மேலும் அறிய
Advertisement
விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் - மணியரசன்
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை நீக்கி அவர்களிடம் பறித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த நிலப்பறிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். உழவர்களிடமிருந்து பல்வேறு வடிவங்களில் பறித்த நிலங்கள் அனைத்தையும் அவர்களுக்கே திருப்பி கொடுக்க வேண்டும். திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை விலக்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். பொருளாளர் மணி மொழியன், சாமி கரிகாலன், தமிழர் தேசிய களம் அமைப்பாளர் கலைச்செல்வம், ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரை. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன .
இதில் காவிரி உரிமை மீட்பு குழு துரை.ரமேஷ், செந்தில் வேலன், ராமலிங்கம், சிவப்பிரகாசம், சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, பழ. ராஜேந்திரன், ஜெயக்குமார், புண்ணியமூர்த்தி, தென்னவன், ராசேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகு உள்ளது. மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. இதற்காக அரசு நிலத்தை பறிப்பதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பலர் போராட்டம் நடத்திய பிறகு விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
எனவே அவரை உடன் விடுவிக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். தற்போது சிலர் தூண்டுதல் பெயரில் எதிர் போராட்டம் நடந்து வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை நீக்கி அவர்களிடம் பறித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் எங்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு , இயக்கங்களை திரட்டி பல்வேறு வடிவங்களில் நடைபெறும். நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion