மேலும் அறிய
Advertisement
காப்பீடு தர மறுக்கும் வங்கி; ரூ.1 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஆயுள் காப்பீடு செய்த நபர் இறந்த நிலையில் காப்பீடு தர மறுக்கும் எச்டிஎப்சி வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.
ஆயுள் காப்பீடு செய்த நபர் இறந்த நிலையில் காப்பீடு தர மறுக்கும் எச்டிஎப்சி வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கூட்டுறவு நகர் சித்திரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவர் வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் விளமல் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எச்டிஎப்சி கிளையிலிருந்து போன் மூலம் ராஜாவை தனிநபர் கடன் வாங்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு கடன் பெற்று அதனை முறையாக திருப்பி செலுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த 04.02.2019 ல் அதே கிளையில் மூன்று லட்சத்து 25,482 ரூபாயை தனி நபர் கடனாக பெற்றுள்ளார். இதற்காக மாதந்தோறும் 9519 ரூபாயை சுலப மாத தவணையாக தனது வங்கி கணகில் பிடித்தம் செய்யும் முறைப்படி திருப்பி செலுத்தி வந்தார்.
மேலும் இந்த கடன் பெறும்போது ஆயுள் காப்பீடு செய்ய வங்கி கிளை அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஹெச்டிஎப்சி எர்கோ சர்வ் சுரக்ஷா ப்ரோ என்கிற பாலிசியை அவர் ஒருமுறை பிரிமியம் செலுத்தும் முறையில் 2240 ரூபாய் செலுத்தி 05.02.2019 முதல் 04-02-2023 ம் தேதி வரை எடுத்துளளார். இந்த நிலையில் கடந்த 13.08.2021ல் ராஜா தனது 54 வது வயதில் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவரத்தினை மும்பையில் உள்ள எச்டிஎப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தெரியப்படுத்தும் வகையில் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை வைத்து கடந்த 11.09.2021 ல் விண்ணப்பித்து இறந்த தனது கணவருக்கு காப்பீடு நிறுவனத்தில் இருந்து கிடைக்கக்கூடிய இறப்பு பலன்களின் தொகை வைத்து கணக்கினை நேர் செய்து கொள்ள ராஜாவின் மனைவி கற்பகச் செல்வி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு கடந்த 25.12.2021 ல் பதில் அனுப்பிய இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று பதில் அனுப்பி உள்ளது.
இதனையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான கற்பகச் செல்வி இது குறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு தனி நபர் கடன் பெற்ற தொகையில் எச்டிஎப்சி கிளை அவரது வங்கிக் கணக்கில் இருந்து டியூ பார் கம்பைன்ட் சர்வ் சுரக்ஷா இன்ஸ் டூ பேங்க் என குறிப்பிட்டு 5,482 ஐ பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவனத்தில் கிரடிட் சீல்டு இன்சூரனஸ் மற்றும் இதர சேவைகளுக்காக செலுத்தப்பட்டு அது கடந்த 05.02.2019 ஆம் தேதி முதல் 04.02.2023 ஆம் தேதி வரை பாலசி உள்ளது என்றும் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கியும் புகார்தாரரின் கணவர் மருத்துவ குறிப்புகளை கேட்பது சட்டப்படி ஏற்புடையதில்லை என்றும் அவர் உயிரிழந்த நிலையில் அவர் செலுத்த வேண்டிய கடன் தொகையினை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளாமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.
மேலும் ராஜா பெற்றிருந்த தனி நபர் கடனுக்கான பாக்கி தொகையை வங்கி தரப்பு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு ராஜா பெற்ற கடன் கணக்கை முடித்து அதற்கான நோ டியூஸ் சர்டிபிகேட்டை புகார்தாரரிடம் ஆறு வார காலத்திற்குள் எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ தனித்தோ வழங்க வேண்டும் என்று புகார்தாரர்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடு தொகையாக ஒரு லட்சம் ரூபாயை எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ தனித்தோ வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயை இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ தனித்தோ வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு உத்தரவு பிறப்பித்த தேதியில் இருந்து ஒன்பது சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டுமென அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion