மயிலாடுதுறையில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த மாணவர்கள் - தட்டிக்கேட்ட மாணவர்கள் மீதும் தாக்குதல்
சீர்காழி அருகே பேருந்தில் மாணவிகளை கிண்டல் செய்த செய்தவர்களை தட்டிக்கேட்ட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. சீர்காழி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீர்காழி டவுன் பகுதி என்பதால் சீர்காழி தாலுக்காவை சேர்ந்த ஏராளமான கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகள் செல்ல சீர்காழிக்கு பேருந்துகளில் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பனங்காட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் சீர்காழியில் உள்ள பள்ளிகளுக்கு படிப்பதற்காக பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் பனங்காட்டான்குடி இருந்து சீர்காழி வரும் வழியில் பேருந்தில் வரும் பள்ளி மாணவிகளை வேறுபள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இதனை மாணவிகளுடன் பயிலும் சக பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனையடுத்து மாணவிகளை கிண்டல் செய்த நிம்மேலி, தென்னங்குடி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆத்திரம் அடைந்து, தட்டிகேட்டு நான்கு பள்ளி மாணவர்களை அவரது உறவினர்களுடன் சேர்ந்து பேருந்தில் இருந்து இறங்கி சரமாரியாக கட்டையால் தாக்கி அடித்துள்ளனர். இதனை பேருந்து நிலையம் அருகே இருந்தவர்கள் தடுத்து காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் சீர்காழி அரசு மற்றும் சிகிச்சை சேர்த்தனர். மேலும் இது தொடர்பாக சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் சரியான முறையில் இயங்காத நிலையில் மீண்டும் தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், பள்ளி மாணவர்கள் ரவுடிகளை போன்று பொது வெளியில் தாக்கி கொன்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.