டாஸ்மாக் கடை ஊழியரிடம் கலக்ஷன் பணம் 6 லட்சத்தை பறிக்க முயற்சி - இரும்பு கம்பியால் தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானக்கடை சூப்பர்வைசரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்த 53 வயதான செல்வம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
Income Tax Refund:வருமான வரி ரீஃபண்ட் தாமதம் ஆகிறதா? ஏன்? தெரிந்துகொள்ள வேண்டியவை..
இந்நிலையில் இவர், மூன்று நாட்கள் மது விற்பனை நடைபெற்ற மொத்த பணம் 6 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கடையில் விற்பனையாளராக உள்ள சீர்காழியை சேர்ந்த 47 வயதான கலியபெருமாள் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் எடுத்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்துவதற்காக சென்றுள்ளனர்.
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் திங்கள் கிழமை வியாபாரத்தையும் முடித்து பணத்தை எடுத்து கொண்டு செல்லும் வழியில் வில்லியநல்லூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கையில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் செல்வத்தை வழிமறித்து பணத்தை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பியோட முயன்ற செல்வத்தின் வலது கை மற்றும் முதுகில் கத்தியால் கீறியும், காலில் இரும்பு கம்பியால் மர்மநபர்கள் தாக்கியுள்ளனர்.
விழுப்புரத்தில் 13 வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
இதையடுத்து, செல்வம், கலியபெருமாள் இருவரும் கூச்சலிட்டதில் சாலையில் வந்தவர்கள் கூடுவதை கண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அவ்வழியே வந்த மணல்மேடு காவல் நிலைய காவலர் ஒருவர் மணல்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் செல்வத்தை மீட்டு வில்லியநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்து, மேலும் கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்கு பதிவு செய்த தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் டாஸ்மார்க் சூப்பர்வைசர் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த நபர்கள் யார்? யார் என்ற விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். டாஸ்மார்க் சூப்பர்வைசர் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.